
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜூலை 2019-ல் AIMIM கட்சியின் தலைவரும், ஹைதராபாத் தொகுதியின் மக்களவை எம்.பியுமான அசாதுதீன் ஒவாய்சி மும்பையில் அரசியல் கூட்டம் ஒன்றில் பேசிய பொழுது, இந்தியாவின் நுழைவாயில்(India Gate) 95,300 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை கொண்டுள்ளது. அதில், 61,945 பெயர்கள் முஸ்லீம்கள் எனக் கூறி இருந்தார்...
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
அவரின் கூற்றைப் போன்றே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு உள்ளனர். இந்த தகவல் தொடர்பாக முகநூலில் பதிவு செய்யப்பட்ட பதிவு ஒன்றில், " நியூ டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் 95,300 பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில், மதம் மற்றும் சாதி வாரியாக உள்ளவர்களின் எண்ணிக்கை. முஸ்லீம்கள் 61,395 பேர் , சீக்கியர்கள் 8,050 பேர் , இந்து(பிற்படுத்தப்பட்டோர்) 14,480 பேர், இந்து(தலித்) 10,770 பேர் , இந்து(உயர் வகுப்பு) 598 பேர் எனக் குறிப்பிட்டு இருந்தனர்.
दिल्ली के इंडिया गेट पर कुल 95,300 स्वतंत्रता सेनानियों के नाम है...
✓ मुसलमान :- 61395
✓ सिख :- 8050
✓ पिछड़े :- 14480
✓ दलित :- 10777
✓ सवर्ण :- 598
✓ संघी :- 000
और कुछ बेशर्म लोग मुसलमानों को गद्दार कहते हैं, जबकि ख़ुद उनका इतिहास अंग्रेजों की मुखबिरी करते गुजरी है।
— MD Danish Raza 🖋️ (@MDDanishRza1) July 17, 2019
இந்தியாவின் நுழைவாயில்(India Gate) நினைவுச் சின்னம் சுதந்திர போராட்ட வீரர்களுக்காக அமைக்கப்பட்டதா, அதில் 61,395 பேர் முஸ்லீம்களா என்பது குறித்த உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்த்தோம்.
இந்தியாவின் நுழைவாயில் :
டெல்லியில் உள்ள இந்தியா கேட் நினைவுச் சின்னம் இந்தியா சுதந்திரப் போராட்டத்தில் இறந்த வீரர்களுக்காக அமைக்கப்பட்டு எனக் கூறுவது தவறான தகவலாகும். இது குறித்த முழுமையான தகவலை அறிந்து கொள்ள தேடிய பொழுது " Delhi tourism " என்ற அரசின் அதிகாரப்பூர்வ தளத்தை காண முடிந்தது.

அதில் , " 1919-ல் ஆஃப்கான் போரில் வடமேற்கு எல்லையில் கொல்லப்பட்ட 13,516 பிரிட்டிஷ் மற்றும் இந்திய வீரர்களின் பெயர்கள் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. Edwin Lutyens என்பவரால் வடிவமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் 10 ஆண்டுகளுக்கு பிறகு நாட்டிற்காக லார்டு இர்வின் ஆல் அர்பணிக்கப்பட்டது " எனக் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்தியா கேட் உடைய மேல் பகுதியில் இந்தியா என்ற எழுத்திற்கு இடது பக்கத்தில் MCMXIV (1914) என்றும், வலது பக்கத்தில் MCMXIX (1918) என்றும் ரோமன் எண்களால் குறிப்பிடப்பட்டு உள்ளன. முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் படையில் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் படையுடன் இணைந்து போரிட்டு உயிரிழந்தனர். அப்போரில் இறந்த இந்திய வீரர்களின் நினைவாக இந்தியா கேட் நினைவுச் சின்னம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது.
முஸ்லீம்கள் எண்ணிக்கை :
Commonwealth War Graves Commission (CWGC) என்ற சர்வதேச அமைப்பு உலகப் போரில் இறந்த வீரர்களின் பட்டியலை சேமித்து வைத்துள்ளது. அதில், இந்தியா கேட்டில் பொறிக்கப்பட்ட 13,220 இந்திய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

அதில், பல முஸ்லீம் பெயர்கள் பெயர்கள் இடம்பெற்று உள்ளன. எனினும், உலகப் போரில் இறந்த இந்திய வீரர்களின் மதங்களின் விவரங்கள் குறிப்பிடவில்லை. இந்தியா கேட்டில் மதம், சாதி சார்ந்தும் விவரங்கள் பொறிக்கப்படவில்லை.
முடிவு :
நமது தேடலில் இருந்து, டெல்லியில் உள்ள நினைவுச் சின்னமான இந்தியா கேட் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களின் நினைவாக அமைக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் முதலாம் உலகப் போரில் இறந்த இந்திய வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னமே இந்தியா கேட்.
இந்தியா கேட்டில் பல முஸ்லீம் பெயர்கள் இருந்தாலும், 61,945 முஸ்லீம்கள் என பதிவிடுவது தவறான தகவலே. மதத்தின் அடிப்படையிலான எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எங்குமில்லை.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பல முஸ்லீம்கள் தங்களின் உயிரை அளித்துள்ளனர்.எனினும், இந்த தகவலானது முற்றிலும் தவறானதே. எம்பி அசாதுதீன் ஒவாய்சி தவறான தகவலை பேசியுள்ளார் என இதில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.