YouTurn

இந்தியாவின் கடன் 100 லட்சம் கோடியைத் தாண்டியது !

இந்தியாவின் கடன் 100 லட்சம் கோடியைத் தாண்டியது !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

பரவிய செய்தி

ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது மத்திய அரசின் கடன். 2014-ல் 54 லட்சம் கோடி, 2019-ல் 82 லட்சம் கோடி, ஜூன் 2020-ல் 101.3 லட்சம் கோடி.

விரிவான விளக்கம்

நாட்டின் அனைத்து திட்டங்களுக்கும் நிதிப்பற்றாக்குறை காரணமாக கடன் பெற்று திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் மீதான நிலுவை கடன்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதை கவனித்து வருகிறோம். கடந்த ஆண்டு வெளியான தரவுகளின்படி, இந்தியாவின் மொத்த கடன் 82 லட்சம் கோடியாக உயர்ந்து இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இந்தியாவின் கடன் சுமை 100 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது.



மத்திய அரசின் நிதி அமைச்சகம் வெளியிட்ட கடன் விவரங்கள் குறித்த தரவுகளின்படி, 2020 மார்ச் வரையில் ரூ.94.6 லட்சம் கோடியாக இருந்த மொத்த கடன் ஏப்ரல்-ஜூன் வரையில் 101 லட்சம் கோடியாக மாறி உள்ளது. பொதுக் கடன் தொகை 92 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. கொரோனா பாதிப்பு தொடங்கிய குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டும் 7 லட்சம் கோடி கடன் உயர்ந்து இருக்கிறது.

இந்தியா பொருளாதார மந்தநிலையை சந்தித்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நாட்டில் உற்பத்தி இல்லாமல் போனது. இதனால் கடன் மட்டுமே பெறும் சூழல் உருவாகியது. 2020-ன் நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 7 லட்சம் கோடி கடன் தொகை உருவாகி இருக்கிறது.

மேலும் படிக்க : இந்தியாவின் கடன் 82 லட்சம் கோடி ! | நான்கரை ஆண்டில் 49 % உயர்வு

கடந்த ஆண்டு வெளியான தரவுகளின்படி, 2014-ம் ஆண்டு வரை ரூ.54,90,763 கோடியாக இருந்த நாட்டின் மொத்த கடன் 2018 செப்டம்பர் வரையில் ரூ.82,03,253 கோடியாக உயர்ந்து இருந்தது. நாட்டின் கடன் சுமை 49% அளவிற்கு அதிகரித்தது. 2014க்கு பிறகு 6 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த கடன் தொகை 46 லட்சம் கோடி அதிகரித்து இருக்கிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க