YouTurn

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவின் பின்னணி காரணம் உண்மையா ?

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவின் பின்னணி காரணம் உண்மையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக பேசிய பிரதமர் மோடி, மார்ச் 22-ம் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ஒருநாள் அனைவரும் வெளியே வரவில்லை என்றால் கொரோனா யாரும் இல்லை என நினைத்து போய் விடுமா என கிண்டல் மீம்ஸ்களை...

பரவிய செய்தி

வரும் மார்ச் 22 இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவின் பின்னணி என்னவாக இருக்கும் ? ஒரு இடத்தில் கொரோனா வைரஸின் ஆயுள் சுமார் 12 மணி நேரம், ஊரடங்கு உத்தரவு 14 மணிநேரம் இருப்பதால், கொரோனா வைரஸ் இதுவரையில் பரவி இருக்கும் பொதுப் பகுதிகளின் இடங்கள் மற்றும் புள்ளிகள் 14 மணி நேரம் தொடப்படாததால், அதன் தொடர்சங்கிலி உடைக்கப்படும். 14 மணி நேரத்திற்கு பிறகு நமக்கு கிடைப்பது மிகவும் பாதுகாப்பான நாடாக இருக்கும்.



Facebook post link | archived link 

விரிவான விளக்கம்

இந்திய மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக பேசிய பிரதமர் மோடி, மார்ச் 22-ம் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ஒருநாள் அனைவரும் வெளியே வரவில்லை என்றால் கொரோனா யாரும் இல்லை என நினைத்து போய் விடுமா என கிண்டல் மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.





இந்நிலையில், கொரோனா வைரஸின் ஆயுட்காலம் 12 மணி நேரம் மட்டுமே என்பதால் நாட்டில் 14 மணி நேரம் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தால் வெளிப்பகுதியில் இருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவ முடியாது. அதன் தொடர் சங்கிலி இதுவே பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவிற்கு பின்னால் இருக்கும் காரணம் என்றும், இதற்கு ராணுவ உதவியை நாடியுள்ளதாகவும், மீறி வெளியேறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பரப்பி வருகிறார்கள்.



பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்திரி ஜெயராம் தன்னுடைய முகநூல் பக்கத்திலும் அத்தகவலை தொடர்ந்து பதிவிட்டு இருந்தார். பின்னர் அதை நீக்கி உள்ளார். இதனை மக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

அமெரிக்க அறிவியலாளர்களின் ஆராய்ச்சியின்படி, " புதிய கொரோனா வைரஸ் (Covid-19) ஆனது காற்றில் பல மணி நேரங்களுக்கு உயிர் வாழும் மற்றும் சில பொருட்களின் மீது 2-3 நாட்களுக்கு உயிர் வாழும் எனக் கூறியுள்ளனர். நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து இருமல், தும்மல் மூலம் காற்றில் வெளியேறும் வைரஸின் தன்மையை அவர்கள் சோதித்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் குறைந்தபட்சம் 3 மணி நேரங்களுக்கு காற்றில் இருக்கும், கார்டுபோர்ட்களில் 24 மணி நேரமும், பிளாஸ்டிக் மற்றும் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் போன்றவற்றில் 2-3 நாட்களுக்கு உயிருடன் இருக்கும் எனத் தெரிவித்து உள்ளனர். ஆக, உடலுக்கு வெளியே வரும் கொரோனா வைரஸ் 12 மணி நேரம் மட்டும் உயிர் வாழும், 14 மணி நேரத்திற்கு பிறகு நோய் பரவல் இருக்காது என்பது பொருந்தாத தகவல் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க : வெப்பநிலை மாறினால் கொரோனா வைரஸ் பரவல் குறையுமா ?

சூரிய வெப்பத்தால் கொரோனா வைரசால் உயிர் வாழ முடியாத சூழலும் இருப்பதாக வைரல் செய்யப்படுகிறது. இங்குள்ள வெப்பநிலைக்கு கொரோனா வைரசால் பரவ முடியாத என்பதை விரிவாக முன்பே கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

ஊரடங்கு உத்தரவு ஏன் ? 

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து நூற்றுக்கணக்கில் பரவி உள்ளது. கொரோனா வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு அதிவேகமாக பரவுகிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் வைரஸ் எளிதாக பரவும் சூழல் உள்ளது.



கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வீட்டில் இருந்தே பணி செய்வது போன்றவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது. போக்குவரத்து சேவையும் குறைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் உள்ள மக்கள் தாங்களாகவே முன் வந்து ஊரடங்கு நிலையை கடைபிடிக்க விடும் வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். ஊரடங்கு நிலை முடிவடைந்த பிறகு மக்கள் தங்கள் வீடுகளின் மாடியில் இருந்து வைரஸ் பாதிப்பிற்காக மருத்துவ சேவையாற்றுபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைதட்டல் போன்ற சத்தத்தை எழுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலில் மக்களுக்கும் தக்க ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே பரவலை கட்டுப்படுத்த முடியும் என அரசு நினைக்கிறது. ஆகையால், மக்கள் வெளியே கூட்டமாய் கூடுவதை தவிர்க்க நினைக்கின்றனர். அதற்காகவே ஊரடங்கு உத்தரவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், உடலுக்கு வெளியே 12 மணி நேரம் கொரோனா வைரஸ் உயிர் வாழும் என்ற தவறான தகவலை மக்களும், அரசியல் ஆதரவாளர்களும் பரப்பி வருகிறார்கள் என்பதை தெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…