YouTurn

இந்தியாவைக் காட்டிக் கொடுத்து பாகிஸ்தானிடம் பணத்தை வாங்கிய எல்லை பாதுகாப்பு வீரர் எனப் பரவும் தவறான வீடியோ!

இந்தியாவைக் காட்டிக் கொடுத்து பாகிஸ்தானிடம் பணத்தை வாங்கிய எல்லை பாதுகாப்பு வீரர் எனப் பரவும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ 2018ஆம் ஆண்டு வெளியானது. கான்பூர் காவல்துறையினரால் ரூ.96 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் கைது செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோவாகும்

பரவிய செய்தி

இவர் ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர். கேரளாவுக்கு ரயிலில் தனது ஊருக்கு போகும் போது 46 லட்சம் ரூபாயுடன் பிடிபட்டார். அவரது வீட்டில் சோதனை செய்ததில் ரூபாய் 962 கோடி சிக்கி இருக்கிறது. நமது பாரத நாட்டை காட்டிக் கொடுக்க பாகிஸ்தானிடம் இருந்து பெற்ற கைக்கூலி இவர்தான் கருப்புஆடு



X Link

விரிவான விளக்கம்

இந்தியாவை காட்டிக்கொடுத்து பாகிஸ்தானிடம் இருந்து பணத்தை பெற்ற எல்லை பாதுகாப்பு வீரர் எனகே கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன ?


பரவி வரும் வீடியோ குறித்து தேடியதில், கடந்த 2018-ல் இருந்தே பரவி வரும் வீடியோ  சமூக ஊடகங்களில் வைரலாகி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.


மேலும் தேடியதில்,  2018,ஜனவரி 27 அன்று taak jhaank என்ற யூடியூப் பக்கத்தில் "Breaking News 96.40 crore Recovered from Anand khatri builder of kanpur", என்ற தலைப்பில் வீடியோ பதிவாகி இருந்ததை பார்க்க முடிந்தது.


>


இதனை தொடர்ந்து, ABP live இணையதளப்பக்கத்தில் கடந்த 2018 ஜனவரி அன்று செய்தி வெளியிட்டிருந்ததை கவனித்தோம்.


அதில், கான்பூர் காவல்துறையினரால் ரூ.96 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்தாகவும், குற்றம் சாட்டப்பட்ட பிரபல கட்டிடக் கலைஞர் உட்பட 16 பேர் கான்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

image.png



மூத்த காவல் கண்காணிப்பாளர் அகிலேஷ் குமார் மீனா பேசுகையில், ரூ.95 கோடி கட்டிடக் கலைஞர் ஆனந்த் காத்ரிக்கு சொந்தமானது என்றும், மீதமுள்ள தொகை ஒரு டஜன் பேருக்கு சொந்தமானது என்றும் குறிப்பிட்டிருந்தது.


இதனைதான் அண்மையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு, CRPF வீரர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் இணைத்து தவறாக பரப்பி வருகின்றனர்.


இதுபோன்ற போலி செய்திகளை யூடூரன் உண்மை சரிபார்த்து இணையதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


முடிவு:


நம் தேடலின் வழியாக, இந்தியாவை காட்டிக்கொடுக்க பாகிஸ்தானிடம் இருந்து பணத்தை பெற்ற எல்லை பாதுகாப்பு வீரர் என்று பரவும் காணொளி தவறானது என்பது தெளிவாகிறது. மேலும் 2018 ஆம் ஆண்டு நடந்த பழைய சம்பவத்தை தற்போது நடந்தாக கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க