யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பாகிஸ்தானில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக காவல்துறையினருடன் சேர்ந்து ‘யூனுஸ் அமின்’ என்பவர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களே இவை. இதை தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
பட்டையை கிளப்பும் 'துரந்தர் 2'.. பாகிஸ்தானில் பெரும் பீதி..! தெருதெருவாக தேடும் போலீஸ்.. பிச்சைக்காரர்கள் தெறித்து ஓட்டம் - பாலிமர் நியூஸ்
விரிவான விளக்கம்
கடந்த ஆண்டு ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம், தற்போது ‘துரந்தர்: தி ரெவெஞ்ச்’ என அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ளது. இந்திய உளவாளி ஜஸ்கிரத் சிங் ரங்கி (ரன்வீர் சிங்), பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஹம்சா அலி மசாரி என்ற பெயரில் நிழல் உலக தாதாவாக உருவெடுக்கிறார். மெல்ல மெல்ல பாகிஸ்தானின் அரசியல், பயங்கரவாதம் மற்றும் அதிகார மையங்களுக்குள் ஊடுருவியதை பற்றியதே இத்திரைப்படத்தின் கதை.
இந்நிலையில் துரந்தர் 2 திரைப்படம் வெளிவந்த பிறகு, பாகிஸ்தானியர்கள் அங்குள்ள பிச்சைக்காரர்களை கூட இந்திய உளவாளிகளோ என்று நினைத்து சந்தேகிக்கின்றனர் என்று கூறி, வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது. இந்த வீடியோவை ‘பாலிமர் நியூஸ்’ ஊடகமும், “பட்டையை கிளப்பும் 'துரந்தர் 2'.. பாகிஸ்தானில் பெரும் பீதி..! தெருதெருவாக தேடும் போலீஸ்.. பிச்சைக்காரர்கள் தெறித்து ஓட்டம்” என்று குறிப்பிட்டு செய்தியாக வெளியிட்டுள்ளது.
#துரந்தர்2 சம்பவத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் முழுவதும் பீதி...
இப்போது பிச்சைக்காரர்களை கூட விடுவதில்லை 😜😜
ஒவ்வொரு தெருவிலும் "இந்திய உளவாளிகளை" தேடிக்கொண்டிருக்கிறார்கள். 😭😂 pic.twitter.com/GbZ9u0xoxi
🔥Durandhar 2 பார்த்ததுக்குப் பிறகு பாகிஸ்தான் போலீஸ்க்கு கற்பனை சக்தி உச்சிக்கே போயிருச்சு 🤯
#Durandhar2 #காமெடி #OverAction #JustForFun #ReelVsReal pic.twitter.com/nyLYG8zqTT
சாலை ஓரத்தில் நிக்குற எல்லாரும்:
“RAW ஏஜெண்ட் தான்… 100% உறுதி!” 🤡
பாவம் மக்கள்:
“அய்யோ… நான் பஜ்ஜி தான் விக்கறேன்…” 😭
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “kawishparekh“ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது. ‘Grand Operation’ என்று குறிப்பிட்டு வைரலாகும் இவ்வீடியோ டிசம்பர் 26, 2025 அன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இதே போன்று செப்டம்பர் 18, 2025 அன்று பகிரப்பட்டிருந்த மற்றொரு வீடியோவில், பாகிஸ்தானைச் சேர்ந்த எஸ்எஸ்பி ஜாஃபர் சித்திக் சாங்காவின் அதிகாரப்பூர்வ அறிக்கை பற்றி கூறப்பட்டிருந்தது. அதில், “இந்த “Grand Operation”-ன் முக்கிய நோக்கம், போதைக்கு அடிமையான நபர்களைக் கைது செய்து அவர்களை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்புவதும், போதைப்பழக்கத்திலிருந்து மீள அவர்களுக்கு உதவுவதும், போதைப்பொருளில் இருந்து இந்த சமூகத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவதும் ஆகும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இது குறித்து மேலும் தேடியபோது, “Pak Observer” எனும் ஊடகத்தில் கடந்த 2025 ஜூலை 19 அன்று “Grand Operation’: Meet Yunus Amin – Viral Sensation taking down Karachi’s Drug Addicts” என்று தலைப்பிட்டு 'Grand Operation' தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை ‘யூனுஸ் அமின்’ என்பவர் காவல்துறை உதவியுடன் மீட்டு, அவர்களை குளிப்பாட்டி, உணவளித்து, மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.
மேலும் ‘யூனுஸ் அமின்’, “ANCC Organization” எனும் தொண்டு நிறுவனத்தில் "Operational Director" இருந்து வருகின்றார் என்பதையும் உறுதிபடுத்த முடிந்தது.
ANCC Pakistan-ன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களிலும் பரவி வரும் வீடியோவைப் போன்றே பல வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்தன.
இதன் மூலம் பரவி வரும் வீடியோ, பாகிஸ்தானில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக காவல்துறையினருடன் சேர்ந்து ‘யூனுஸ் அமின்’ என்பவர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள். இதை தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், பரவி வரும் வீடியோ கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் எடுக்கப்பட்டது. 'துரந்தர் 2' திரைப்படத்திற்கும் இந்த வீடியோவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிறது.