
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
ICELAND-நாட்டில் ஆண்கள் பற்றாக்குறை காரணமாக ஐஸ்லேண்ட் பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மாதம் 3.5 லட்சம் பணம் வழங்க அந்த நாட்டு அரசு முடிவெடுதுள்ளது.

Facebook link
விரிவான விளக்கம்
ஐஸ்லாந்து நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தினால் அந்நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மாதம் ரூ.3.5. லட்சம் பணம் வழங்க ஐஸ்லாந்து அரசு முடிவு செய்துள்ளதாக ஒர் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Facebook link
https://twitter.com/Gangai_twit/status/1605917820222857217
Archive link

உண்மை என்ன ?
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு இளைஞர்களுக்குப் பணம் தருவதாகப் பரவும் செய்தி குறித்து இணையத்தில் தேடினோம்.

Archive link
'Iceland monitor' என்ற இணையதளத்தில் 2018, அக்டோபர் 8ம் தேதி இது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. “Icelandic government does not pay men to marry Icelandic women” எனத் தலைப்பிடப்பட்ட அச்செய்தியின் தலைப்பிலேயே, ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டினருக்கு அரசு பணம் அளிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive link
மேலும், இந்த தகவல் 2016ம் ஆண்டு முதலே இணையத்தில் பரப்பப்பட்டு வரும் வதந்தி என்றும், பலரும் இதனை உண்மை என நம்பி வருவதாக 2016 ஜூலை மாதம் Iceland monitor செய்தி வெளியிட்டுள்ளது. ஐஸ்லாந்து அரசு இணையதளத்தின் திருமணம் குறித்த பதிவிலும் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

Archive link
அடுத்ததாக ஐஸ்லாந்து நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ள தகவல் குறித்து இணையத்தில் தேடினோம். ஐ.நா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 'Statistics Times' என்ற இணையதளம் தரவுகளை வரிசைப்படுத்தியுள்ளது.

அதன்படி 2021ல் 100 பெண்களுக்கு 100.96 ஆண்கள் ஐஸ்லாந்து நாட்டில் உள்ளனர். வயது வாரியாக பார்க்கையிலும் கணிசமான அளவு ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : எரித்ரியாவில் ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்யச் சட்டமா ?
இதே போல, எரித்ரியாவில் ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனச் சட்டம் நிறைவேற்றியதாக மாலை மலர், சமயம், தினத்தந்தி பொய்யான செய்தியை வெளியிட்டது. அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், ஐஸ்லாந்து நாட்டில் ஆண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அந்நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு ஆண்களுக்கு மாதம் 3.5 லட்சம் பணம் தருவதாகப் பரவும் செய்தி உண்மை அல்ல என அறிய முடிகிறது.