YouTurn

ஐஸ்லாந்தில் அனைத்து மதங்களும் "Mental disorders" எனச் சட்டமா ?

ஐஸ்லாந்தில் அனைத்து மதங்களும் "Mental disorders" எனச் சட்டமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

நையாண்டி

சரிபார்க்கப்பட்ட கூற்று

உலகில் உள்ள நாடுகள் பலவும் மதங்களுடன் பிணைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மத நம்பிக்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐஸ்லாந்து நாட்டின் அரசு அந்நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும் " மன நோய் " என அறிவிக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்றி உள்ளதாக ஓர் செய்தி சமூக வலைதளங்களில்...

பரவிய செய்தி

அனைத்து மதங்களையும் " Mental disorders " என்று அறிவிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது ஐஸ்லாந்து.



Facebook link | archived link

விரிவான விளக்கம்

உலகில் உள்ள நாடுகள் பலவும் மதங்களுடன் பிணைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மத நம்பிக்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐஸ்லாந்து நாட்டின் அரசு அந்நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும்  " மன நோய் " என அறிவிக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்றி உள்ளதாக ஓர் செய்தி சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களுடன் பகிரப்பட்டு வருகிறது.



வைரல் செய்தியில், " அனைத்து மதங்களையும் " Mental disorders " என்று அறிவிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது ஐஸ்லாந்து. ஐஸ்லாந்து பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 60-3 என்ற அறுதிப் பெரும்பான்மையுடன் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்டத்தின்படி முதற்கட்டமாக பொது இடங்களில் மதரீதியான எந்தச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதையோ தடைச் செய்கிறது " என நீண்ட பதிவை இணைத்து உள்ளார்.

இந்த பதிவை பகிர்ந்த யூடர்ன் ஃபாலோயர்கள், அதன் உண்மைத்தன்மைக் குறித்து தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஐஸ்லாந்து நாட்டின் மதம் சார்ந்த புதிய சட்டம் குறித்து ஆராய்ந்த பொழுது அவ்வாறான சட்டம் இயற்றப்படவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

உண்மை என்ன ? 



ஐஸ்லாந்து நாட்டில் அனைத்து மதங்களும் " மன நோய் " என அறிவிக்கும் சட்டத்தை இயற்றியது தொடர்பான கட்டுரையானது ஜனவரி 21-ம் தேதி Patheos.com என்ற இணையதளத்தில் முதலில் வெளியாகி இருக்கிறது. Patheos.com என்பது Satire என பொதுவாக அழைக்கப்படும் நையாண்டித்தனமான செய்திகளை வெளியிடுபவர்கள்.



இந்த கட்டுரையை Andrew hall என்பவர் " Laughing in Disbelief " என்ற தொடரின் கீழ் எழுதி உள்ளார். மதம் சார்ந்து நையாண்டித்தனமாக கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றனர் என்பதை அவர்களின் இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

Patheos.com பிரபல நையாண்டித்தளமான "The Onion " போன்றதே. இவர்கள் அரசியல், ஆன்மிகம் உள்ளிட்ட மக்கள் பேசக்கூடிய விசயங்களில் நையாண்டித்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டுரைகளை வெளியிடுவார்கள். இதுபோன்ற கட்டுரைகள் சில நேரங்களில் கிண்டலாக இருந்தாலும், சில நேரங்களில் பிரச்சனையாகவும் மாறி விடுகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…