YouTurn

அபிநந்தன் மனைவி பேசுவதாகப் பரவும் வீடியோ ?

அபிநந்தன் மனைவி பேசுவதாகப் பரவும் வீடியோ ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஃபேஸ்புக்கில் அபிநந்தன் மனைவி என டைப் செய்தால் இவர் பேசும் வீடியோ தான் முதலில் வருகிறது. அந்த அளவிற்கு இந்தியாவில் வைரலாகி வருகிறது. Youtube-கூட இவ்வாறாகக் கூறி வீடியோவை பலரும் வெளியிட்டு உள்ளனர். ஆனால், வீடியோவில் பேசுபவர் விங் கமாண்டர் அபிநந்தன் அவர்களின் மனைவி அல்ல. வீடியோவில் பேசத் தொடங்கும்...

பரவிய செய்தி

பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் அவர்களுடைய மனைவி பேசும் வீடியோ.

விரிவான விளக்கம்

ஃபேஸ்புக்கில் அபிநந்தன் மனைவி என டைப் செய்தால் இவர் பேசும் வீடியோ தான் முதலில் வருகிறது. அந்த அளவிற்கு இந்தியாவில் வைரலாகி வருகிறது. Youtube-கூட இவ்வாறாகக் கூறி வீடியோவை பலரும் வெளியிட்டு உள்ளனர்.



ஆனால், வீடியோவில் பேசுபவர் விங் கமாண்டர் அபிநந்தன் அவர்களின் மனைவி அல்ல. வீடியோவில் பேசத் தொடங்கும் பொழுதே " நான் ஒரு ராணுவ வீரரின் மனைவி " எனக் கூறியிருப்பார்.



மேலும், தொடர்ந்து பேசும் பொழுது " அபிநந்தன் குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கும் வேதனையை கற்பனை செய்து பாருங்கள் " என ஒரு மூன்றாம் தரப்பு நபர் போன்றே கூறி இருப்பார்.

இதையெல்லாம், தவிர்த்து விங் கமாண்டர் அபிநந்தன்  கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரின் குடும்பத்தை பற்றிய தகவல்களை மீடியாவில் வெளியிட்டு இருந்தனர். அதில், அவரின் மனைவியின் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. செய்தி சேனல் ஒன்றில் இதே வீடியோ பதிவிட்டு, ராணுவ வீரர் மனையின் பேச்சு என வெளியிடப்பட்டுள்ளது.

ஆகையால், வைரல் ஆகும்  வீடியோவில் இருப்பவர் அபிநந்தன் மனைவி அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வீடியோவில் பேசிய ராணுவ வீரரின் மனைவி , " எனது சக இந்தியர்களுக்கு, குறிப்பாக அரசியல் தலைவர்கள் எங்கள் வீரர்களின் தியாகத்தை அரசியலாக்க வேண்டாம்  " என இந்திய அரசியல் களம் குறித்து விமர்சித்து இருப்பார்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.