YouTurn

சுவிட்சர்லாந்தின் CERN-ல் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை முன்பு நரபலி நிகழ்த்தப் படுவதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

சுவிட்சர்லாந்தின் CERN-ல் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை முன்பு நரபலி நிகழ்த்தப் படுவதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ. “அனுமதியின்றி சிலரால் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கடந்த 2016-லேயே ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

பரவிய செய்தி

Remembering the ritualistic human sacrifice in front of CERN's Shiva the Lord of Destruction statue…

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் (CERN) நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை முன்பு நரபலி நிகழ்த்தப் படுவதாக கூறி வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில் கருப்பு உடை அணிந்த நிறைய நபர்கள், நடுவில் ஒரு பெண்ணை அமர்த்தி பூஜை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த வீடியோ குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது ”Fake human sacrifice to Lord Shiva conducted at CERN, investigation on” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 19,2016 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள CERN கட்டடத்திற்கு வெளியே எடுக்கப்பட்ட போலி நரபலி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியதாகவும், இது குறித்து CERN-ன் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


இது குறித்து மேலும் தேடிய போது, ”CERN investigating viral video of ‘human sacrifice’ in front of Shiva statue” என்ற தலைப்பில் ஆகஸ்ட் 18, 2016 அன்று News Minute ஊடகத்தில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. ஜெனீவாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள CERN வளாகத்தில் நடந்த போலி நரபலியை சித்தரிக்கும் காணொளி வைரலானதை அடுத்து, அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் CERN வலைத்தளத்தின்படி, நடராஜர் வடிவில் உள்ள 2 மீட்டர் உயர சிவபெருமான் சிலை, இந்தியாவிலிருந்து பரிசாக ஜூன் 2004 இல் நிறுவப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


மேலும் The Guardian ஊடகப்பக்கத்தில், ”Fake human sacrifice filmed at Cern, with pranking scientists suspected” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இந்த காட்சிகள் தங்கள் வளாகத்தில் தான் அனுமதி இல்லாமல் படமாக்கப்பட்டதாகவும், CERN ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து போதுமான அறிவியல் பயனர்களை வரவேற்பதாகவும், சிலர் நகைச்சுவையாக இதை செய்ததாகவும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

நம் தேடலில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் (CERN) நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை முன்பு நரபலி நிகழ்த்தப் படுவதாகப் பரவும் வீடியோ 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இது சித்தரிக்கப்பட்ட ஒரு போலி வீடியோவாகும். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க