YouTurn

"வர்ண நீதி தழைக்க நான் முதல்வராக தயார்" என ஹெச்.ராஜா கூறினாரா ?

"வர்ண நீதி தழைக்க நான் முதல்வராக தயார்" என ஹெச்.ராஜா கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நான் முதல்வரானால்தான் தமிழ்நாட்டில் போலி சமூகநீதி ஒழிந்து இந்து வர்ண நீதி தழைக்கும் என்றால் அதற்கு நான் தயார் - ஹெச்.ராஜா



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே வார்த்தை மோதல் நிகழ்வதை இருகட்சியின் தலைவர்களின் கருத்துக்கள் எடுத்துரைக்கிறது.

இந்நிலையில், " நான் முதல்வரானால்தான் தமிழ்நாட்டில் போலி சமூகநீதி ஒழிந்து இந்து வர்ண நீதி தழைக்கும் என்றால் அதற்கு நான் தயார் " என பாஜக தலைவர் ஹெச்.ராஜா கூறியதாக IBC தமிழ் செய்தியின் முகநூல் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.





ஹெச்.ராஜா கூறிய கருத்து எனக் கூறி வைரலாகும் நியூஸ் கார்டை வைத்து கண்டனம் தெரிவித்தும், கிண்டல் செய்தும் மீம்கள் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஹெச்.ராஜா பேசும் போது அது அனைத்து செய்திகளிலும் வெளியாகி சமூக வலைதளங்களில் கன்டென்ட் ஆக உருவெடுக்கும். ஆனால், வைரலாகும் நியூஸ் கார்டில் உள்ள கருத்து மற்ற செய்திகள் மட்டுமின்றி IBC தமிழ் தரப்பிலும் கூட வெளியாகவில்லை.



Archive link 

IBC தமிழ் முகநூலில் டிசம்பர் 27-ம் தேதி வெளியான மற்றொரு செய்தியின் கார்டில் ஹெச்.ராஜா குறித்த போலியான கருத்தை எடிட் செய்து வைரல் செய்து வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க