
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
#தேவரை_அவமதித்த_எச்ராஜா pic.twitter.com/m59LTVR5EQ
— Krishna moorthy (@Krishna87177280) November 3, 2020
Twitter link | Archive link

ஒன்இந்தியா தமிழ் இணையதளம், " முத்துராமலிங்க தேவரை கை கூப்பி வணங்காத ஹெச். ராஜா- பிராமணர் சங்கம் பெயரில் பாராட்டு போட்டோ வைரல் " எனும் தலைப்பில் வைரலான புகைப்படம் குறித்த செய்தியை வெளியிட்டு இருந்தது. ஆனால், அந்த செய்தியை தற்போது நீக்கி உள்ளனர்.

Oneindia News link
வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
ஹெச்.ராஜா முத்துராமலிங்கத் தேவரின் சிலையை வணங்கவில்லை எனக் கூறுவது தவறான தகவல். அவர் மலர் வளையத்தின் மீது கை வைத்திருக்கும் புகைப்படத்தைப் பயன்படுத்தி தவறாக வைரல் செய்துள்ளனர்.
தன்னைப் பற்றி வதந்தி செய்திகள் பரவுவதை அறிந்து முத்துராமலிங்கத் தேவரின் சிலையை வணங்கும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜா பதிவிட்டு உள்ளார்.
தேசியமும் தெய்வீகமும் நமது இருகண்கள் pic.twitter.com/b0blZbTAMx
— H Raja (@HRajaBJP) November 3, 2020
Twitter link | Archive link
மேலும், தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் ஹெச்.ராஜாவிற்கு நன்றி கூறியதாக பரவிய புகைப்படம் போலியானது என தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையையும் ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர், முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
வேண்டுமென்றே பொய்யான செய்தியை பதிவிட்ட @thatsTamil மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பொய் செய்தித்தளம் @thatsTamil வை புறக்கணிப்போம். https://t.co/yRkM187hoW pic.twitter.com/WzdsdMy4a8
— H Raja (@HRajaBJP) November 3, 2020
Twitter link | Archive link

தவறான செய்தியை வெளியிட்ட ஒன்இந்தியா தமிழ் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹெச்.ராஜாவின் ட்விட்டர், முகநூல் பக்கங்களில் பதிவாகி இருக்கிறது. இதையடுத்து, ஒன்இந்தியா தமிழ் இணையதளமும் அந்த செய்தியை நீக்கி உள்ளது.