YouTurn

ஹெச்.ராஜா வடமாநில மக்களுக்கு தமிழக பணிகளில் இடஒதுக்கீடு கேட்டாரா ?

ஹெச்.ராஜா வடமாநில மக்களுக்கு தமிழக பணிகளில் இடஒதுக்கீடு கேட்டாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

வட மாநில மக்கள் இந்தியர்கள் இல்லையா ? அவர்களுக்கு தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அளிப்பதில் என்ன தவறு - ஹெச்.ராஜா 

Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், காரைக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஹெச்.ராஜா, வட மாநில மக்கள் இந்தியர்கள் இல்லையா ? அவர்களுக்கு தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அளிப்பதில் என்ன தவறு எனக் கூறியதாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.





ஹெச்.ராஜா பேசியதாக விகடன் நியூஸ் கார்டில் வெளியான பதிவிற்கு ஒருவர் பதில் அளித்தது போன்று இருக்கும் படத்தை சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். வேதாளை-தா-உமர் எனும் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட இப்பதிவு 10 ஆயிரம் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

ஹெச்.ராஜா வட மாநில மக்களுக்கு தமிழக பணிகளில் இடஒதுக்கீடு வழங்குவது தவறில்லை எனக் கூறினாரா எனத் தேடுகையில், அவ்வாறான செய்திகள் ஏதும் கிடைக்கவில்லை. வைரல் செய்யப்படும் படத்தில் விகடன் உடைய லோகோ இருப்பதால் விகடன் செய்திகளை தேடிப் பார்த்தும் அவ்வாறான பதிவுகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து, விகடன் தரப்பிற்கு தொடர்பு கொண்டு பேசிய போது, " கடந்த 3 மாதங்களாக இவ்வாறான எந்த பதிவும் வெளியிடவில்லை " எனப் பதில் அளித்து இருந்தனர்.

அடுத்து, தமிழக பாஜகவின் கமலாயத்திற்கு தொடர்பு கொண்டு செய்தித்தொடர்பாளர் தரப்பில் கேட்ட போது, " இது போலி செய்தி " எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து செய்து விட்டனர். கூடுதல் தகவல் ஏதும் அளிக்கவில்லை.



Twitter link | Archive link 

வைரல் செய்யப்படும் விகடன் நியூஸ் கார்டு கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில், " தமிழக மக்கள் ஓட்டுப் போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை. கஜா புயலில் பாதிக்கப்பட்ட இடத்தை பிரதமர் ஏன் பார்வையிட வரவில்லை என்ற கேள்விக்கு ஹெச்.ராஜா மழுப்பல் பதில் " என வெளியாகி இருந்த பதிவில் இருந்து ஃபோட்டோஷாப் செய்து இருக்கிறார்கள்.



மேலும் படிக்க : ஆடு, கோழி பலியிட தடை, வட மாநிலத்தவருக்கு 50% இடஒதுக்கீடு என பாஜக அறிவித்ததாக வதந்தி !

இதற்கு முன்பாக, தேசிய ஒற்றுமையை வளர்க்க தமிழ்நாட்டு அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் வட மாநிலத்தவர்க்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என பாஜக தேர்தல் தொலைநோக்கு பத்திரத்தில் கூறியதாக ஃபோட்டோஷாப் செய்து பரப்பி இருந்தனர். அதன் நீட்சியாகவே, வடமாநில மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் என்ன தவறு என ஹெச்.ராஜா கூறியது போன்று தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

முடிவு :

நம் தேடலில், வட மாநில மக்கள் இந்தியர்கள் இல்லையா ? அவர்களுக்கு தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அளிப்பதில் என்ன தவறு என பாஜக தலைவர் ஹெச்.ராஜா கூறியதாக பரப்பப்படும் தகவல் தவறானது, அதற்காக விகடன் நியூஸ் கார்டை ஃபோட்டோஷாப் செய்து பரப்பி வருகிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க