யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
திமுக யானை என்றால் அதிலிருந்து பிரிந்து வந்த அதிமுக அதன் சாணியே . ஆனால் இப்போது எங்களுடன் சேர்ந்து அதிமுக பிள்ளையார் ஆகியிருக்கிறது - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா

விரிவான விளக்கம்
தமிழக பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, " திமுக யானை என்றால் அதிலிருந்து பிரிந்து வந்த அதிமுக அதன் சாணியே. ஆனால் இப்போது எங்களுடன் சேர்ந்து அதிமுக பிள்ளையார் ஆகியிருக்கிறது " என தங்கள் கூட்டணியில் இருக்கும் அதிமுகவை விமர்சித்தது போல் கருத்தை கூறியதாக ஜூன் 24-ம் தேதியிட்ட தந்தி டிவி நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Twitter link | Archive link

உண்மை என்ன ?
சட்டப் பேரவையில் ஆளுநர் உரை குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்கள். இந்த அறிக்கையில் மணியோசையும் இல்லை, யானையும் இல்லை " எனக் கூறினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், " யானை என்று சொன்னதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். திமுக என்பது யாராலும் அடக்க முடியாத யானை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் " எனக் கூறினார்.
இதையடுத்தே, ஹெச்.ராஜா இப்படியொரு கருத்தைக் கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு வைரலாகி இருக்கிறது. இதுகுறித்து தேடுகையில், அப்படி எந்தவொரு கருத்தையும் ஹெச்.ராஜா அவர்கள் கூறவில்லை, அப்படி எந்த செய்தியும் வெளியாவில்லை. எடிட் செய்த போலி செய்தியை வைரல் செய்து இருக்கிறார்கள்.
தந்தி டிவி செய்தியும், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டை தாங்கள் வெளியிடவில்லை, அது போலியானது எனப் பதிவிட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், திமுக யானை என்றால் அதிலிருந்து பிரிந்து வந்த அதிமுக அதன் சாணியே . ஆனால் இப்போது எங்களுடன் சேர்ந்து அதிமுக பிள்ளையார் ஆகியிருக்கிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.

Twitter link | Archive link

உண்மை என்ன ?
சட்டப் பேரவையில் ஆளுநர் உரை குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பார்கள். இந்த அறிக்கையில் மணியோசையும் இல்லை, யானையும் இல்லை " எனக் கூறினார். இதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், " யானை என்று சொன்னதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். திமுக என்பது யாராலும் அடக்க முடியாத யானை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் " எனக் கூறினார்.
இதையடுத்தே, ஹெச்.ராஜா இப்படியொரு கருத்தைக் கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு வைரலாகி இருக்கிறது. இதுகுறித்து தேடுகையில், அப்படி எந்தவொரு கருத்தையும் ஹெச்.ராஜா அவர்கள் கூறவில்லை, அப்படி எந்த செய்தியும் வெளியாவில்லை. எடிட் செய்த போலி செய்தியை வைரல் செய்து இருக்கிறார்கள்.
தந்தி டிவி செய்தியும், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டை தாங்கள் வெளியிடவில்லை, அது போலியானது எனப் பதிவிட்டு இருக்கிறது.முடிவு :