YouTurn

ஜக்கி வாசுதேவை முடிந்தால் கைது செய்யுமாறு ஹெச்.ராஜா சவால் விட்டாரா ?

ஜக்கி வாசுதேவை முடிந்தால் கைது செய்யுமாறு ஹெச்.ராஜா சவால் விட்டாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழக அரசிற்கும் ஸ்டாலினுக்கும் கோடிக்கணக்கான ஹிந்துக்களின் சார்பில் வெளிப்படையான சவால். உங்களுக்கு தைரியம் இருந்தால் திராணி இருந்தால் துணிச்சல் இருந்தால் ஸ்ரீ சத்குரு ஜீ அவர்கள் மீது கை வைத்தோ கைது செய்தோ பாருங்கள். எங்களை எல்லாம் தாண்டி தான் அவரை உங்களால் நெருங்க முடியும். ஹிந்துக்களின் நம்பிக்கையை சீண்டாதீர் - ஹெச்.ராஜா



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

சட்டவிதிமீறல்களை செய்துள்ளதாகக் கூறி கோவை ஈஷா மையம் மீதும், ஜக்கி வாசுதேவ் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு பல்வேறு கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் வந்து கொண்ட இருப்பதை பார்க்க முடிந்தது. தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் தன்னுடைய பேட்டியில் ஜக்கி வாசுதேவ் மீது விரைவிலோ அல்லது பின்னரோ நடவடிக்கை  எடுக்கப்படும் எனத் தெரிவித்து இருந்ததாக செய்திகளில் வெளியாகியது.



இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா தன்னுடைய முகநூல் பக்கத்தில், ஜக்கி வாசுதேவை முடிந்தால் கைது செய்து பாருங்கள் என சவால் விட்டதாக இப்பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. திமுக ஆதரவாளர்கள் முகநூல் பக்கங்களில் இப்பதிவு சுற்றி வருகிறது.

உண்மை என்ன ?

ஹெச்.ராஜா அவர்களின் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட பக்கங்களை ஆராய்கையில், கடந்த சில தினங்களாக எந்தப் பதிவும் வெளியாகவில்லை என்பதை அறிய முடிந்தது. இதுபோன்ற எந்த பதிவும் இடம்பெறவில்லை. வைரல் செய்யப்படும் ட்வீட் ஸ்க்ரீன்ஷார்டில் எழுத்துக்களின் வரிசை சரியாக இல்லை என்பதை பார்க்கலாம்.



Facebook link

மே 10-ம் தேதி ஹெச்.ராஜா உடைய முகநூல் பக்கத்தில், " இந்துவிரோத அரசின் முதல் இந்து விரோதச் செயல். அரசே ஜீயரை நியமிக்க முனைவது மிகப் பெரிய அராஜகம். கார்டினல் ஆர்ச்பிஷப் பாதிரியாரை நியமிக்கும் துணிச்சல் இந்த இந்து விரோதிகளுக்கு வருமா? வீதிக்கு வந்து போராடுவது தவிர வேறு வழியில்லை போலும் " என ஜீயர் நியமனம் தொடர்பாக வெளியிட்ட ட்வீட் பதிவே இருந்தது.

இதையும் வைரல் ட்வீட் ஸ்க்ரீன்ஷார்டை ஒப்பிட்டு பார்க்கையில், இந்த பதிவில் தான் எடிட் செய்து இருக்கிறார்கள் எனத் தெளிவாய் தெரிகிறது.



தமிழக நிதியமைச்சர் ஜக்கி வாசுதேவ் பற்றி பேசியதற்கு தமிழக பாஜகவின் காயத்ரி ரகுராம் தன் ட்விட்டர் பக்கத்தில், " இந்து ஆலயங்களின் சொத்துக்களை பாதுகாக்கவேண்டும் என சொன்னதற்காக ஜக்கி வாசுதேவ் மீது தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராசன் குற்றம் சொல்வதும் அவரை மிரட்டி பார்த்து இந்துக்களை கிள்ளுக்கீரைகள் என நினைக்கிறார் தைரியமிருந்தால் திராணியிருந்தால் அய்யா ஜக்கி வாசுதேவை தொட்டு பாருங்கள்! தமிழகம் கொந்தளிக்கும " எனப் பதிவிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Twitter link | archive link 

முடிவு :

நம் தேடலில், முடிந்தால் ஜக்கி வாசுதேவை கைது செய்யும்படி பாஜக தலைவர் ஹெச்.ராஜா தமிழக அரசிற்கும், மு.க.ஸ்டாலினுக்கும் சவால் விட்டதாக பரவும் பதிவு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க