யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை நீடிக்கும் ஊரடங்கில் குறிப்பிட்ட உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நோய்த்தொற்றின் பரவலின் காரணமாக 2019 அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள், ரிசார்ட்கள், உணவகங்கள் மூடப்பட இந்திய சுற்றுலாத்துறையின் பெயரில் போலியான...
பரவிய செய்தி
மத்திய சுற்றுலாத்துறை உத்தரவின்படி, 2020-ல் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் அக்டோபர் 15-ம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், ரிசார்ட்கள் மூடப்படுகிறது.

விரிவான விளக்கம்
இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை நீடிக்கும் ஊரடங்கில் குறிப்பிட்ட உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் இயங்கி வருகின்றன. இந்நிலையில், நோய்த்தொற்றின் பரவலின் காரணமாக 2019 அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள், ரிசார்ட்கள், உணவகங்கள் மூடப்பட இந்திய சுற்றுலாத்துறையின் பெயரில் போலியான அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது.
இந்தியச் சுற்றுலாத்துறையின் தரப்பில் இருந்து ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்படுவதாக எந்தவொரு உத்தரவும் வெளியாகவில்லை. மேலும், ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீடிப்பது குறித்து இன்னும் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
அடுத்ததாக, வைரலான அறிக்கையை PIB (Press Information bureau) தன் ட்விட்டர் பக்கத்தில் போலியானது என வெளியிட்டு உள்ளது.
Twitter link | archive link
இந்திய சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் pib வெளியிட்ட ட்வீட் பதிவு பகிரப்பட்டுள்ளதை காணலாம்.

Twitter link
கோவிட்-19 நோய்த்தொற்று பரவி வரும் சூழ்நிலையில் அரசின் அறிவிப்பு என பல வதந்திகள், தவறான தகவல்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளன. ஆகையால், பரவும் தகவலின் நம்பகத்தன்மையை அறிந்து பகிரவும்.

Be cautious of #Fake order claiming that hotels/resturants will remain closed till 15th October 2020 due to #Coronavirusoutbreak.#PIBFactCheck: The order is Fake and has NOT been issued by Ministry of Tourism.
Do not believe in rumours! pic.twitter.com/efRx3PWTj0
— PIB Fact Check (@PIBFactCheck) April 8, 2020