YouTurn

வங்கதேசத்தில் இந்துக் கோயில் தாக்கப்படுவதாகப் பரவும் உணவக விடுதி வீடியோ!

வங்கதேசத்தில் இந்துக் கோயில் தாக்கப்படுவதாகப் பரவும் உணவக விடுதி வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தப்படுகிறது, அங்குள்ள இந்து கோவில்கள், இந்துக்களின் வீடுகள் ஆகியவை தாக்கப்பட்டு இந்துக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகின்றனர் என்று கூறி வீடியோ ஒன்றை வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

வங்காளதேசத்தில் ஹிந்துக்கள் மீது கொடும் தாக்குதல். ஹிந்து கோவில்கள், ஹிந்துக்களின் வீடுகள், கட்டடங்கள், ஹிந்து மருத்துவமனைகள், அலுவலகங்கள் தாக்கப்பட்டு ஹிந்துக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகின்றனர். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் அராஜகம்.

X Link | Archive Link

விரிவான விளக்கம்

வங்கதேசத்தில், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு குடிமைப் பணிகளில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்க டாக்கா நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். 

பல மாதங்களாக தொடர்ந்த இந்தப் போராட்டம், கடந்த 4ஆம் தேதி வலுப்பெற்றதைத் தொடர்ந்து, போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள், காவல்துறையினர் என 90 பேர் உயிரிழந்தனர். போராட்டம் இன்னும் தீவிரமடைந்தால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். 

இந்நிலையில் வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தப்படுகிறது, அங்குள்ள இந்து கோவில்கள், இந்துக்களின் வீடுகள் ஆகியவை தாக்கப்பட்டு இந்துக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகின்றனர் என்று கூறி வீடியோ ஒன்றை வலதுசாரிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். 

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், பரவி வரும் வீடியோவில் இருப்பது கோயில் அல்ல என்பதை அறிய முடிந்தது. 

வங்கதேச செய்தி ஊடகமான Kalbela பக்கத்தில், பரவி வரும் வீடியோவின் காட்சிகள் குறிப்பிடப்பட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தன. அதில் “சத்கிரா நகரின் பல்வேறு இடங்களிலும், அவாமி லீக் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் வீடுகளில் நாசவேலைகளும் தீவைப்புகளும் நடந்தன. ஒரு கட்டத்தில் மாவட்ட சிறையும் தாக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் எந்த இடத்திலும் இந்து கோவில் தாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை. 

எனவே பரவி வரும் வீடியோவில் உள்ள கட்டிடம் குறித்து தேடியதில், இது வங்கதேசத்தில் அமைந்துள்ள ‘ராஜ் பிரசாத்’ என்ற உணவக விடுதி என்பதை “Md Tariqul Vlogs“ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ மூலம் உறுதி செய்ய முடிந்தது. 

கூகுள் மேப்பிலும் பரவி வரும் வீடியோவில் உள்ள கட்டிடம் குறித்து ஆய்வுசெய்து, இது உணவு விடுதிதான் என்பதை உறுதி செய்தோம். 

இதன்மூலம், வங்கதேசத்தில் அமைந்துள்ள ‘ராஜ் பிரசாத்’ என்ற உணவக விடுதி தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை, அங்குள்ள இந்து கோவில் தாக்கப்பட்டதாகக் கூறி வலதுசாரிகள் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது. 

முடிவு:

நம் தேடலில், வங்கதேசத்தில் இந்து கோவில் தாக்கப்பட்டதாகக் கூறி வலதுசாரிகள் பரப்பும் செய்திகள் தவறானவை என்பதை அறியமுடிகிறது.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க