
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஸ்டேன் சுவாமியின் நிலை என வயதான முதியவர் மருத்துவமனை படுக்கையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2021 மே மாதம் என்டிடிவி இணையதளத்தில் வெளியான செய்தியில், உத்தரப் பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் சிகிச்சையின் போது 92 வயதான கைதியை அவரது மருத்துவமனை படுக்கையில் சங்கிலியால் கட்டி வைத்ததற்காக சிறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதாக " இதே புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

புகைப்படத்திற்கு கீழே கொலை வழக்கு கைதி பாபுராம் சிங் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியா டுடே உள்ளிட்ட பல செய்திகளில் 92 வயதான கைதி என பாபுராம் சிங் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

முடிவு :
நம் தேடலில், மருத்துவமனை படுக்கையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் மறைந்த ஸ்டேன் சுவாமி இல்லை. அந்த புகைப்படத்தில் இருப்பவர் 92 வயதான பாபுராம் சிங் எனும் கைதி. உத்தரப் பிரதேசத்தில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.