YouTurn

மும்பையில் கொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தும் நபர்கள் கையில் முத்திரை.

மும்பையில் கொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தும் நபர்கள் கையில் முத்திரை.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 39-ஐ எட்டியுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்தும் உள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

பரவிய செய்தி

மும்பை விமான நிலையத்தில் வாக்காளர் மையுடன் முத்திரையிடுவது தொடங்கியது. இதுபோன்ற மக்களை தெருக்களில் கண்டால், தயவு செய்து அவர்களை வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தவும்.

விரிவான விளக்கம்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது. அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 39-ஐ எட்டியுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்தும் உள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினால் புனே உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள் முதற்கொண்டு மூடப்பட்டுள்ளன நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அனுப்பப்படும் மக்களின் கைகளில் " முத்திரை " குத்தும் முறையை பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.



" வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பவர்களை இடது கையில் இடம்பெறும் முத்திரை மூலம் எளிதாக அடையாளம் காணலாம். தேர்தலில் வாக்காளர்களுக்கு வைக்கப் பயன்படுத்தப்படும் அழிக்க முடியாத மையின் மூலம் முத்திரை வைக்கப்படும். இதன் மூலம் அந்த நபர்/நோயாளி மார்ச் 31-ம் தேதி வரை கட்டாயம் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை அடையாளப்படுத்தும் " என அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியவரின் மணிக்கட்டில் தனிமைப்படுத்தப்படும் நாள் அடங்கிய முத்திரையை வைக்குமாறு மருத்துவமனை மற்றும் விமான நிலையில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் ஆணை பிறப்பித்து இருந்தார்.

மார்ச் 31-ம் தேதி வரை மக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் மருத்துவர்கள் கூறும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…