யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அமெரிக்கா, லண்டன் என பல நாடுகளில் படம் பார்க்க திரையரங்கு சென்றவர்கள் அமர்ந்த இருக்கையில் HIV தொற்று உள்ள ஊசிகள் இருப்பதாகவும், அதனால் HIV பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்றும் எச்சரிக்கை தகவல் ஒன்று உலாவி வருகிறது. இந்த செய்திக்கு ஆதாரமாக Centre of Disease Control அறிக்கை வெளியிட்டு உள்ளது என்று...
பரவிய செய்தி
எச்சரிக்கை, சமீபத்தில் திரையரங்கு ஒன்றிற்கு சென்ற பெண் திரையரங்கில் உள்ள இருக்கையில் அமரும் போது வலி ஏற்பட்டுள்ளது. உடனே அதில் இருந்து எழுந்து பார்த்த பொழுது இருக்கையில் ஊசி இருப்பதை பார்த்துள்ளார். Centre of Disease Control அறிக்கையில் இதுபோன்ற சம்பவம் பல நகரங்களில் நடந்து உள்ளதாகவும், அனைத்து ஊசிகளையும் பரிசோதித்து பார்த்ததில் அவற்றில் HIV தொற்று இருப்பதும் உறுதி ஆகியுள்ளது. திரையரங்கு மட்டுமின்றி பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.
விரிவான விளக்கம்
அமெரிக்கா, லண்டன் என பல நாடுகளில் படம் பார்க்க திரையரங்கு சென்றவர்கள் அமர்ந்த இருக்கையில் HIV தொற்று உள்ள ஊசிகள் இருப்பதாகவும், அதனால் HIV பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்றும் எச்சரிக்கை தகவல் ஒன்று உலாவி வருகிறது.
இந்த செய்திக்கு ஆதாரமாக Centre of Disease Control அறிக்கை வெளியிட்டு உள்ளது என்று ஓர் தகவலையும் இணைத்து பகிர்ந்து வருகின்றனர். ஆனால், HIV தொற்று பாதித்த ஊசிகள் திரையரங்கில் இருக்க காரணம் என்ன?

Centre of Disease Control சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது எனக் கூறுவது தவறான தகவல். UK-வின் health protection agency-ன் அங்கமான Centre of infections-ன் இணையதளத்தில், திரையரங்கில் HIV பாதித்த ஊசிகள் இருந்ததாக மேற்கோள்காட்டி எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை. அதேபோன்று national health service-ன் இணையதளத்தில் கூட HIV ஊசி பற்றிய எச்சரிக்கை செய்தி ஏதுமில்லை.

Feedy tv என்ற இணையப் பக்கத்தில் ஜூன் 2018-ல் “ HIV Infected needles found in public “ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த கட்டுரையில் hiv பாதித்த ஊசிகள் பொதுமக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாகவும், Centre of Disease Control அறிக்கை பற்றியும் தெரிவித்து இருந்தனர்.

சினிமா திரையரங்கில் HIV தொற்று உள்ள ஊசிகள் இருப்பதாக வதந்திகள் வெளியாகுவது முதல் முறை அல்ல. 20 வருடங்களுக்கு முன்பாகவே 1998-ல் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என்று வதந்திகள் இணையத்தில் பரவியுள்ளன.
என்ன காரணம் ?
திரையரங்கில் hiv தொற்று உள்ள ஊசிகள் இருப்பதாக செய்தி பரவியது போன்று, 1998-ல் நைட் கிளப் மற்றும் பார்களில் ஊசிகள் இருப்பதாக வதந்திகள் பரவின. இதன் தாக்கத்தால் ஆகஸ்ட் 1998-ல் ஓர் நைட் கிளப் 50% நஷ்டத்தை சந்தித்தது.
" சினிமா திரையரங்கு, நைட் கிளப், பார் உள்ளிட்ட பல இடங்களில் HIV ஊசி இருந்ததாகக் கூறி பரவியதால் அவர்களின் வணிகம் நஷ்டத்திற்கு உள்ளாகியது. வதந்திகளுக்கு முதன்மை காரணம் இதுவாகவும் இருக்கலாம் ".
திரையரங்கில் hiv தொற்று உள்ள ஊசிகள் இருப்பதாக பரவும் செய்திகள் பற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திலும் தகவல் வெளியாகவில்லை. மேலும், நோய் தடுப்பு அமைப்புகளின் அதிகாரப்பூர்வ தளத்திலும் எச்சரிக்கை ஏதுமில்லை. ஆகையால், வீண் வதந்தியை நம்ப வேண்டாம்.
Update :

திரையரங்குகளில் HIV தொற்று உள்ள ஊசிகள் இருப்பதாக சில ஆண்டுகளாகவே தவறான செய்திகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. தற்பொழுது, அதே எச்சரிக்கை செய்தியை சென்னை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி பிரிவின் இயக்குநர் அரவிந்த் கமித்கார் தெரிவித்து இருந்தாக ஃபார்வர்டு செய்திகள் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இதே ஃபார்வர்டு செய்தி 2008-ம் ஆண்டுக்கு முன்பே இமெயில் மூலமாகவும் வைரலாகி இருக்கிறது.
எனவே, இதுபோன்ற வதந்திகளை பரப்பி மக்களை அச்சமடையச் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த செய்திக்கு ஆதாரமாக Centre of Disease Control அறிக்கை வெளியிட்டு உள்ளது என்று ஓர் தகவலையும் இணைத்து பகிர்ந்து வருகின்றனர். ஆனால், HIV தொற்று பாதித்த ஊசிகள் திரையரங்கில் இருக்க காரணம் என்ன?

Centre of Disease Control சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது எனக் கூறுவது தவறான தகவல். UK-வின் health protection agency-ன் அங்கமான Centre of infections-ன் இணையதளத்தில், திரையரங்கில் HIV பாதித்த ஊசிகள் இருந்ததாக மேற்கோள்காட்டி எந்தவொரு தகவலும் இடம்பெறவில்லை. அதேபோன்று national health service-ன் இணையதளத்தில் கூட HIV ஊசி பற்றிய எச்சரிக்கை செய்தி ஏதுமில்லை.

Feedy tv என்ற இணையப் பக்கத்தில் ஜூன் 2018-ல் “ HIV Infected needles found in public “ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த கட்டுரையில் hiv பாதித்த ஊசிகள் பொதுமக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாகவும், Centre of Disease Control அறிக்கை பற்றியும் தெரிவித்து இருந்தனர்.

சினிமா திரையரங்கில் HIV தொற்று உள்ள ஊசிகள் இருப்பதாக வதந்திகள் வெளியாகுவது முதல் முறை அல்ல. 20 வருடங்களுக்கு முன்பாகவே 1998-ல் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என்று வதந்திகள் இணையத்தில் பரவியுள்ளன.
என்ன காரணம் ?
திரையரங்கில் hiv தொற்று உள்ள ஊசிகள் இருப்பதாக செய்தி பரவியது போன்று, 1998-ல் நைட் கிளப் மற்றும் பார்களில் ஊசிகள் இருப்பதாக வதந்திகள் பரவின. இதன் தாக்கத்தால் ஆகஸ்ட் 1998-ல் ஓர் நைட் கிளப் 50% நஷ்டத்தை சந்தித்தது.
" சினிமா திரையரங்கு, நைட் கிளப், பார் உள்ளிட்ட பல இடங்களில் HIV ஊசி இருந்ததாகக் கூறி பரவியதால் அவர்களின் வணிகம் நஷ்டத்திற்கு உள்ளாகியது. வதந்திகளுக்கு முதன்மை காரணம் இதுவாகவும் இருக்கலாம் ".திரையரங்கில் hiv தொற்று உள்ள ஊசிகள் இருப்பதாக பரவும் செய்திகள் பற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திலும் தகவல் வெளியாகவில்லை. மேலும், நோய் தடுப்பு அமைப்புகளின் அதிகாரப்பூர்வ தளத்திலும் எச்சரிக்கை ஏதுமில்லை. ஆகையால், வீண் வதந்தியை நம்ப வேண்டாம்.