யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை நிரூபிக்கும் விதமாக எனக் கூறி ஹிந்து சன்னியாசி மற்றும் முஸ்லீம் ஒருவர் மது அருந்துவது போன்ற புகைப்படமானது சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆகியது. இன்னும் சிலர் இந்த புகைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சிலர் எதிர்ப்பு தெரித்தும் பதிவிட்டு இருந்தனர். இருவரின்...
பரவிய செய்தி
பாரில் சம உரிமை என்பதை தவறாக புரிந்து கொண்டார்கள். ஹிந்து சன்னியாசிக்கு முஸ்லீம் ஒருவர் மதுவை ஊற்றும் புகைப்படம். 

விரிவான விளக்கம்
ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை நிரூபிக்கும் விதமாக எனக் கூறி ஹிந்து சன்னியாசி மற்றும் முஸ்லீம் ஒருவர் மது அருந்துவது போன்ற புகைப்படமானது சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆகியது. இன்னும் சிலர் இந்த புகைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சிலர் எதிர்ப்பு தெரித்தும் பதிவிட்டு இருந்தனர்.

இருவரின் கையில் மது இருப்பது போன்ற படத்தை பார்த்த அனைவரும் உண்மை என்றே நினைத்து பகிர்ந்து இருப்பர். ஆனால், இவை மிக மோசமான மனநிலையில் மது பாட்டிலை வைத்து செய்யப்பட்ட ஃபோட்டோஷாப் என்பதை அறியாமல் பகிர்கின்றனர்.
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த தஸ்லீமா நஸிரீன் இந்தியாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் ஆவார். சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் தஸ்லீமா, தன் ட்விட்டர் பக்கத்தில் முஸ்லீம் ஒருவர் ஹிந்து சன்னியாசிக்கு மதுவை ஊற்றும் படத்தை எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் பகிர்ந்து இருந்தார்.

ஆனால், அப்படமானது ஃபோட்டோஷாப் செய்த படங்கள் என தெரிய வந்துள்ளது. ஆம், உண்மையான படத்தில் முஸ்லீம் நபர் கையில் kinley தண்ணீர் பாட்டிலை கொண்டு ஹிந்து சன்னியாசிக்கு தண்ணீரை அளிக்கிறார். அதனை ஃபோட்டோஷாப் செய்து மதுவை ஊற்றுவது போன்று யாரோ ஃபோட்டோஷாப் செய்துள்ளனர்.
தவறான படத்தை வெளியிட்டதற்கு நஸீரின் ட்விட்டர் பக்கத்தில் 200-க்கும் மேற்பட்ட கம்மண்ட்கள் பதிவிட்டதை அடுத்து அந்த பதிவை நீக்கி உள்ளார். இது குறித்த செய்தி மலையாள செய்தியிலும் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, இந்த ஃபோட்டோஷாப் படமானது இரு ஆண்டுகளுக்கு முன்பு 2017-ல் பதிவிடபட்டது. தற்போது மீண்டும் பகிரத் தொடங்கி உள்ளனர்.
ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை இழிவுபடுத்த வேண்டுமென்றே யாரோ ஒருவர் செய்த காரியம் தவறான முன்னுதாரணம் ஆகி விடக் கூடாது.