YouTurn

தமிழை ஒழித்திடக் கூறி இந்து முன்னணி போராட்டம் நடத்தியதா ?

தமிழை ஒழித்திடக் கூறி இந்து முன்னணி போராட்டம் நடத்தியதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழக இந்து முன்னணி அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் தமிழ் மொழிக்கு எதிரான பேனர்கள் இருப்பதாக காண்பிக்கப்படும் புகைப்படம் பல ஆண்டுகளாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. " ஒழித்திடு ஒழித்திடு தமிழை ஒழித்திடு.. புகுத்திடு புகுத்திடு இந்தி, சமற்கிருதம் புகுத்திடு " என்ற வாசகம்...

பரவிய செய்தி

ஒழித்திடு ஒழித்திடு தமிழை ஒழித்திடு.. புகுத்திடு புகுத்திடு இந்தி, சமற்கிருதம் புகுத்திடு - இந்து முன்னணி.



 

விரிவான விளக்கம்

மிழக இந்து முன்னணி அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் தமிழ் மொழிக்கு எதிரான பேனர்கள் இருப்பதாக காண்பிக்கப்படும் புகைப்படம் பல ஆண்டுகளாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



" ஒழித்திடு ஒழித்திடு தமிழை ஒழித்திடு.. புகுத்திடு புகுத்திடு இந்தி, சமற்கிருதம் புகுத்திடு " என்ற வாசகம் இடம்பெற்ற பேனர்களை சுமந்து இருக்கும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த புகைப்படங்கள் 2016-ல் இருந்து தற்பொழுது வரை பரவி வருகிறது என அறிய முடிந்தது.

உண்மை என்ன ? 

இந்து முன்னணி அமைப்பினர் தமிழ் மொழிக்கு எதிராகவும், இந்தி சமஸ்கிருதம் மொழிக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதாக காண்பிக்கப்படும் பேனரின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தோம்.



முதலில் பேனரில் இடம்பெற்று இருக்கும் " ஒழித்திடு ஒழித்திடு தமிழை ஒழித்திடு.. புகுத்திடு புகுத்திடு இந்தி சமற்கிருதம் புகுத்திடு " என்ற வாசகத்தில் சமஸ்கிருதம் என்பதற்கு பதிலாக சமற்கிருதம் என இடம்பெற்று இருக்கிறது.

இந்து முன்னணியினர் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் செய்து பார்க்கையில் ட்விட்டர் தளத்தில் இதே படங்கள் 2017-ல் பகிரப்பட்டு கண்டனம் தெரிவித்து இருந்த பொழுது அந்த பதிவில் kshatriya hindu என்ற ட்விட்டர் வாசி பரவும் புகைப்படங்கள் போட்டோஷாப் என குறிப்பிட்டு இருக்கிறார்.


Twitter link | Archived link  

மேலும், உண்மையான புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார். வேலூர் மாவட்டம் இந்து முன்னணி என்ற பேனரில் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இந்த புகைப்படம் எங்கு பதிவாகியது, அவர்கள் நடத்திய போராட்டம் எதற்காக என்பது குறித்தும் தேடினோம்.



2015-ல் செப்டம்பர் 30-ம் தேதி ஹிந்து செய்தி இணையதளத்தில் " 41 Hindu Munnani volunteers arrested " என்ற தலைப்பில் வெளியான செய்தியில் வைரலாகும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.



செய்தியில், " மத்திய சிறைச் சாலையில் கைதியால்(அல் உம்மா) வார்டன் தாக்கப்பட்ட சம்பத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளனர். போலீஸ் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய காரணத்திற்காக 41 இந்து முன்னணி அமைப்பின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டதாக " கூறப்பட்டுள்ளது.

முடிவு : 

நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், தமிழை ஒழித்திட இந்து முன்னணி அமைப்பினர் பேனர்களை ஏந்தி இருக்கும் புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டவை. அந்த புகைப்படம் பல ஆண்டுகளாக பரவி வருகிறது.

2015-ல் தி ஹிந்து செய்தியில் " வேலூர் இந்து அமைப்பினர் " நடத்திய போராட்டத்தின் உண்மையான புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.