YouTurn

ஹை வோல்டேஜ் பவர் லைன்களின் அருகே லைட் டியூப்கள் தானாக ஒளிருமா ?

ஹை வோல்டேஜ் பவர் லைன்களின் அருகே லைட் டியூப்கள் தானாக ஒளிருமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

கிராம மக்கள் மின்சாரம் செல்லும் பாதையான ஹை வோல்டேஜ் பவர் லைன்களின் கீழே கையில் டியூப்லைட்கள் மற்றும் டெஸ்டர்கள் வைத்துக் கொண்டு நிற்கும் பொழுது அவை ஒளிர்வதை பார்க்க முடிந்து. இது உண்மையா? எப்படி நிகழ்கிறது ? என்ற கேள்விக்கு கேட்கப்பட்டு இருந்தது. நாம் உயர்ந்த மின் கோபுரங்களை பார்த்து இருப்போம்...

பரவிய செய்தி

400kv ஹை வோல்டேஜ் பவர் லைன் கீழே இஎம்எப் காரணமாக டியூப்லைட் மற்றும் டெஸ்டர் ஒளிர்கிறது.

விரிவான விளக்கம்

கிராம மக்கள் மின்சாரம் செல்லும் பாதையான ஹை வோல்டேஜ் பவர் லைன்களின் கீழே கையில் டியூப்லைட்கள் மற்றும் டெஸ்டர்கள் வைத்துக் கொண்டு நிற்கும் பொழுது அவை ஒளிர்வதை பார்க்க முடிந்து. இது உண்மையா? எப்படி நிகழ்கிறது ? என்ற கேள்விக்கு கேட்கப்பட்டு இருந்தது.

நாம் உயர்ந்த மின் கோபுரங்களை பார்த்து இருப்போம். அந்த மின் கோபுரத்தின் ஹை வோல்டேஜ் பவர் லைன்கள் செல்லும் பகுதிக்கு கீழே ஒரு Fluorescent டியூப்லைட்-ஐ கையில் வைத்து இருந்தாலோ அல்லது தரையில் பொருத்தி இருந்தாலும் அவை ஒளிர்வதை பார்க்க முடியும்.

மின்சாரத்தை கடத்தும் பொழுது பவர் லைன்கள் தங்களை சுற்றி ஒரு ஆல்டர்நெட்டிவ் மெக்னடிக் ஃபில்டு-ஐ தூண்டுவதன் விளைவாக ஏற்படுகிறது. கேபிள்கள் மூலம் அதிக அளவிலான வோல்டேஜ் மின்சரம் செல்லும் பொழுது, மின்சாரத்திற்கு சமமான மெக்னடிக் ஃபில்டு அடர்த்தி போன்ற விளைவு மிக அதிகமாக இருக்கும். இந்த ஆல்டர்நெட்டிவ் மெக்னடிக் ஃபில்டு கடத்திகளுக்கு ( டியூப் ) ஒரு மின்னழுத்தத்தை தூண்டுகிறது.



அதிகப்படியான ஆல்டர்நெட்டிவ் மெக்னடிக் ஃபில்டு ஆல் டியூப்லைட்கள் மற்றும் டெஸ்டர்கள் ஒளிர்கிறது. எனினும், இது மின் இணைப்புகளில் இணைக்கப்பட்டால் வரும் பிரகாசத்தை விட குறைவான பிரகாசத்தையே தரும். எனினும், இருளில் கண்ணால் காணக்கூடிய அளவிற்கு ஒளிர்வதை பார்க்கலாம்.

பல நாடுகளில் ஹை பவர் லைன் கீழே டியூப்லைட்கள் வரிசையாக நிற்க வைத்து, கையில் பிடித்துக் கொண்டு என வித்தியாசமான புகைப்படங்களின் தொகுப்பை பார்க்க முடிந்தது. கேட்பதற்கு, பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் இந்த எலெக்ட்ரோ மெக்னடிக் ஃபில்டுகள் மூலம் உடலுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனக் கூறுகின்றனர்.

சுருக்கமாக

ஹை வோல்டேஜ் பவர் லைன்களின் கீழே டியூப்லைட் வைத்து இருந்தால் ஒளிர்வதை பார்க்க முடியும். அங்கு இருக்கும் எலெக்ட்ரிக் மெக்னட்டிக் ஃபில்டு காரணமாக ஒளிர்கின்றன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.