யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஹேமா மாலினிக்கு அரசு நிலம் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டது தொடர்பாக ஆர்.டி.ஐ ஆர்வலரான அனில் கல்கலி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தார். புறநகர் மும்பையின் மாவட்ட ஆட்சியர் அலுவலக தகவலில், 2000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அரசு நிலத்தை பிஜேபி எம்பிக்கு சதுர அடி...
பரவிய செய்தி
ரூ.70 கோடி மதிப்புடைய அரசு நிலத்தை பாஜக எம்பியான ஹேமா மாலினி வெறும் ரூ.1.75 லட்சத்திற்கு பெற்றார். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உறுதி.

விரிவான விளக்கம்
ஹேமா மாலினிக்கு அரசு நிலம் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டது தொடர்பாக ஆர்.டி.ஐ ஆர்வலரான அனில் கல்கலி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தார். புறநகர் மும்பையின் மாவட்ட ஆட்சியர் அலுவலக தகவலில், 2000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அரசு நிலத்தை பிஜேபி எம்பிக்கு சதுர அடி ரூ.87.50 என்ற விலையில் ரூ.1.75 லட்சத்திற்கு நடனப் பள்ளி கட்டுமானப் பணிக்கு வழங்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது .
மகாராஷ்டிரா அரசின் திருத்தப்பட்ட கொள்கையின் கீழ் மும்பையின் உயர் சந்தை பகுதியில் ரூ.70 கோடி மதிப்பு உடைய பிரதான நிலம், நடிகையும், பிஜேபி எம்பி ஆன ஹேமா மாலினிக்கு ரூ.1.75 லட்சத்திற்கு வழங்கப்பட்டதாக ஆர்.டி.ஐ தகவலில் தெரிய வந்தது.
தன்னுடைய பாரத நாட்டிய பள்ளிக்கான நிலத்திற்கு முன்னதாகவே ரூ.10 லட்சத்தை ஹேமா மாலினி செலுத்தி இருந்தார். அதில், ரூ.1.75 லட்சம் போக மீதமுள்ள 8.25 லட்சத்தை அரசு திருப்பி அளிக்க உள்ளதாக தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரம் 2016 ஆம் ஆண்டின் பிப்ரவரியில் மிகப்பெரும் சர்ச்சையானது. இதற்கு முன்பாகவே ஆர்வலர் அனில் கல்கலி ஹேமா மாலினி மீது குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த ஹேமா மாலினி, அரசு நிலத்தை தாம் அபகரிக்கவில்லை. அரசு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளின் படியே பெற்றதாக தெரிவித்தார். இந்த நிலத்தை அவ்வளவு எளிதாக பெறவில்லை என்றும், இதற்காக 20 ஆண்டுகள் தாம் போராடியதாகவும் ஹேமா மாலினி குறிப்பிட்டு இருந்தார்.
அந்தேரியில் உள்ள அம்பிவலி பகுதியில் ஹேமா மானிலினியின் நாட்டிய பள்ளியான " நாட்டியவிஹார் கலகேத்தரா சாரிட்டி டிரஸ்ட் " க்கான கட்டிடம் கட்ட 2000 சதுர அடி நிலமும், சுற்றி தோட்டம் அமைக்க 27,000 சதுர அடி பரப்பளவும் வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பாக, அவர் கட்டிடம் அமைக்க 5,000 சதுர அடி நிலமும், சுற்றி தோட்டம் அமைக்க 29,360 சதுர அடி நிலமும் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

" இப்பொழுது நான் எதுவும் செலுத்தவில்லை. அரசின் அனைத்து விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றி உள்ளேன். விலை பற்றி ஏன் யூகிக்கிறீர்கள், எனக்கு தெரியும் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என, அதற்கான பணம் ஏதுவாக இருந்தாலும் அதனை செலுத்த நான் தயார் " என 2016-ல் ஹேமா மாலினி தெரிவித்து இருந்தார்.
ஆர்.டி.ஐ மூலம் தகவலை பெற்ற ஆர்வலர் அனில், அரசு நிலத்தை தற்போதைய சந்தை மதிப்பிற்கே வழங்க வேண்டும் என கூறினார். மேலும், அம்மாநில முதல்வருக்கு கடிதத்தையும் எழுதுவதாக கூறினார்.
இந்த சர்ச்சைக்கு பிறகு அரசின் நிலங்களை டிரஸ்ட் போன்றவைகளுக்கு வழங்குதில் திருத்தும் கொண்டு வர மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

சுருக்கமாக
இது 2016 ஆம் ஆண்டில் சர்ச்சையான விவகாரம். நடன பள்ளி ஒன்றை அமைக்க மகாராஷ்டிராவில் 2000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அரசு நிலத்தை ரூ.1.75 லட்சத்திற்கு ஹேமா மாலினிக்கு வழங்கப்பட்டது என ஆர்.டி.ஐ தகவலில் 2016 ஆம் ஆண்டில் தெரிய வந்தது.