YouTurn

மலேசியா அரசு தீபாவளியை முன்னிட்டு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டதா?

மலேசியா அரசு தீபாவளியை முன்னிட்டு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது இந்தோனேசியாவின் Kota Batam என்னும் இடத்தில் இயக்கிவரும் தீயணைப்புத்துறையால், வீடுகளில் பொதுவாக ஏற்படும் தீ விபத்துகளை கையாள்வது குறித்து வெளிடப்பட்ட விழிப்புணர்வு வீடியோவாகும்.

பரவிய செய்தி

சாதாரண தண்ணீரை விட சோப்புத் தூள் கலக்கப்பட்ட தண்ணீர் எப்படி பட்ட தீயாக இருந்தாலும் அது பற்றி எரியும் போது அது மற்ற இடங்களுக்கு பரவாமல் சுலபமாக அணைக்கும் என்று ஆய்வின் மூலம் கண்டறிந்து மலேசியா அரசு சார்பாக அந்நாட்டின் தீயணைப்புத்துறை வரும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு இவ்வாறு விளக்கப்படம் வெளியிட்டுள்ளது



X Link

விரிவான விளக்கம்

அதிகாரி உடையில் இருக்கும் ஒருவர் சோப்புநுரையுள்ள தண்ணீரைக் கொண்டு நெருப்பை அணைக்கும் வீடியோவை பதிவிட்டு, மலேசியா நாட்டின் தீயணைப்புத்துறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன? 


பரப்பப்பட்ட வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், இதே வீடியோ ஆகஸ்ட் 8ஆம் தேதி ”Pemadam Kebakaran BP Batam” என்ற பக்கத்தை tag செய்து Doni Masrul  என்பவர் பேஸ்புக் தளத்தில் பதிவிடப்பட்டிருப்பதைக் கண்டோம். ”எளிய பொருட்களைக் கொண்டு வீட்டில் தீயை அணைக்க அவசர நடவடிக்கைகள்” என்று இந்தோனேசிய மொழியில் தலைப்பிடப்பட்டு இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. ”Pemadam Kebakaran BP Batam” என்பதை Google Translate செய்து பார்க்கையில், இந்தோனேசிய மொழியில் ”தீயணைப்பு வீரர்” என்று அறிகிறோம். இதில் ”BP Batam” என்பது இந்தோனேசியா நாட்டின் ஒரு இடம் என்பதை அறிகிறோம். 



இந்த பேஸ்புக் பக்கத்தில், கொடுக்கப்பட்டிருந்த வலைதளத்தில் சென்று பார்த்தபோது ஒரு முகவரியை கண்டோம். அதை Google Map உதவியுடன் தேடியதில், இந்த வீடியோயில் பேசிக்கொண்டிருக்கும் அதிகாரியின் பின்னணியில் இருந்த அதே இடத்தை பார்க்கமுடிந்தது. இந்த கட்டிடத்தில் எழுதியிருந்த வார்த்தைகளான “Mitigasi dan Pemadam Kebakaran” வார்த்தைகளை  Google Translate செய்து பார்க்கையில் இந்தோனேசிய மொழியில் “ தீ தணிப்பு மற்றும் தீ அணைத்தல்” என்பதை அறிகிறோம். 



இதிலிருந்து இந்த வீடியோ இந்தோனேசியா நாட்டின் ”கோட்டா பாட்டம் (Kota Batam)” என்னும் இடத்தில் இருக்கும் தீயணைப்புத்துறையால் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. தீ விபத்து சம்பந்தமாக பல வீடியோக்கள் மேற்குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவிடப்பட்டுள்ளது என்பதை கொண்டு பார்க்கையில் இது நிச்சயம் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்ட வீடியோ அல்ல என்பது உறுதியாகிறது.


முடிவு:


இந்த வீடியோ மலேசியா நாட்டில் எடுக்கப்படவில்லை. இந்தோனேசியா நாட்டின் Kota Batam என்னும் இடத்தில் இயங்கிவரும் தீயணைப்புத்துறையால் வெளியிடப்பட்டது. மேலும், இந்த வீடியோ, வீடுகளில் பொதுவாக ஏற்படும் தீயை அணைப்பது பற்றிய விழிப்புணர்வு வீடியோவாகும். தீபாவளியை முன்னிட்டு எடுக்கப்பட்டதல்ல. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க