YouTurn

அரசு பழமையான இந்து கோவில்களுக்காக நிதி எதுவும் ஒதுக்கவில்லையா? உண்மை என்ன?

அரசு பழமையான இந்து கோவில்களுக்காக நிதி எதுவும் ஒதுக்கவில்லையா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களைப் புனரமைத்துப் பாதுகாத்திடும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் அரசு நிதி ரூ.425 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 84 கோயில்களில் குடமுழுக்குகள் நிறைவு பெற்றுள்ளன.

பரவிய செய்தி

தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு: ஒரு ஒப்பீடு.. தமிழக அரசின் சுயரூபம் மற்றும் நிலைப்பாடு பற்றி உங்கள் கருத்து என்ன?


X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்கள் மேம்பாட்டிற்காகவும், பழமையான தேவாலயங்களை புதுப்பிக்கவும் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் பழமையான இந்து கோவில்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று குறிப்பிட்டு இந்து முன்னணியினர் சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்றை பரப்பி வருகின்றனர். 


#TNBudget #TNBudget2026 #ThangamThenarasu #DMKGovt #CommentsPlease #HinduMunnani pic.twitter.com/mMyHBzZGyW

— Hindu Munnani (@hindumunnani_tn) February 17, 2026


உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்கள் மேம்பாட்டிற்காக ரூ. 58 கோடியும், பழமையான தேவாலயங்களை புதுப்பிக்க ரூ. 25 கோடியும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது உண்மையே என்பதை அறிய முடிந்தது. 

இதைத் தொடர்ந்து பழமையான இந்து கோவில்களை புதுப்பிக்க ஆன செலவு குறித்து ஆய்வு செய்தோம். அதன்படி, 2026-27 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், “கடந்த ஐந்து ஆண்டுகளில், 12,931 கோயில்களில் ரூ.8,100 கோடி மதிப்பிலான புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களைப் புனரமைத்துப் பாதுகாத்திடும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் அரசு நிதி ரூ.425 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 84 கோயில்களில் குடமுழுக்குகள் நிறைவு பெற்றுள்ளன” என்றும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதன் மூலம் பழமையான திருக்கோயில்களைப் புனரமைத்துப் பாதுகாத்திடும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் அரசு நிதி ரூ.425 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.


முடிவு: 


நம் தேடலில், தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்கள் மேம்பாட்டிற்காகவும், பழமையான தேவாலயங்களை புதுப்பிக்கவும் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் பழமையான இந்து கோவில்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று குறிப்பிட்டு இந்து முன்னணியினர் பரப்பும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க