YouTurn

இம்ரான் கான் பற்றி புதின் பேசுவதாக போலி வீடியோவை பதிவிட்ட துக்ளக் குருமூர்த்தி !

இம்ரான் கான் பற்றி புதின் பேசுவதாக போலி வீடியோவை பதிவிட்ட துக்ளக் குருமூர்த்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில் துக்ளக் குருமூர்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில், " புதின் எப்படி இம்ரான் கானை புறம்தள்ளினார் என்பதை அவசியம் பார்க்க வேண்டிய காணொளி. தீவிரமானது, நகைச்சுவையாக இருக்கிறது " என ரஷ்யாவின் அதிபர் புதின் பேசும் 29 நொடிகள் கொண்ட வைரல் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.



அந்த வீடியோவில் புதின் பேசுவதற்கு கீழே வரும் சப்-டைட்டிலில், " UNSC-ல் எனது உரையின் போது கில்கித்-பல்திஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என நான் தெளிவுப்படுத்தினேன். கில்கித்தை ஒரு தற்காலிக மாகாணமாக உருவாக்கும் பாகிஸ்தானின் முயற்சியை ரஷ்யா ஆதரிக்கவில்லை. இந்த விவகாரத்தில் என்னை சமாதானப்படுத்த பிரதமர் இம்ரான் கான் மாஸ்கோவிற்கு வந்தார் " என புதின் தொடர்ந்து பேசுவது இடம்பெற்று இருக்கிறது.

உண்மை என்ன ?

ரஷ்யாவின் அதிபர் புதின் ஐரோப்பிய நாடுகளை பொய்களின் பேரரசு என அழைத்தது உலக அளவில் செய்திகள் பலவற்றில் வெளியாகியது. வைரலாகும் புதின் பேசும் அதே வீடியோவை பிப்ரவரி 28-ம் தேதி ரஷ்யாவைச் சேர்ந்த ரஷ்யா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது. ஆனால், புதின் கில்கித்-பல்திஸ்தான் பற்றி ஏதும் பேசவில்லை என சப்-டைட்டில் மூலம் அறிய முடிகிறது



துக்ளக் குருமூர்த்தி பதிவிட்ட வீடியோ வைரலாகியதால், " இதை பலர் தீவிரமாக எடுத்துக் கொண்டனர். இது வேடிக்கையானது " எனக் கூறி தன்னுடைய பழைய ட்விட்டை பகிர்ந்து இருக்கிறார்.



Twitter link | Archive link

முடிவு : 

நம் தேடலில், ரஷ்யாவின் அதிபர் புதின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் கில்கித் -பல்திஸ்தான் பிரச்சனை குறித்து பேசியதாக துக்ளக் குருமூர்த்தி பதிவிட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க