
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்

Facebook Link
குஜராத்தில் திருமண அழைப்பிதழ்களில் வைத்து போதைப்பொருள் கடத்தும் பாஜகவினர் pic.twitter.com/yXDUo00HYd
— bjp troll mafia 🇮🇳 (@bjptrollmafia35) October 21, 2022
உண்மை என்ன ?
சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ குறித்து இணையத்தில் தேடியபோது, 2020 பிப்ரவரி 23ம் தேதி "Wedding cards more expensive than Ambani's? How Rs 5 crore worth drugs were hidden" எனும் தலைப்பில் தி நியூஸ்மினிட் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.
"கர்நாடகா மாநிலம் பெங்களூரின் கேம்பேகௌடா (Kempegowda) விமான நிலையத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுள்ள பத்திரிகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பத்திரிகைகளில் 5 கிலோவுக்கு மேல் தடை செய்யப்பட்ட Ephedrine drug எடுக்கப்பட்டது" எனப் பதிவிடப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில் தற்பொழுது குஜராத்தில் நடந்தது எனப் பரப்பப்படும் வைரல் வீடியோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

Article Link
2020ல் ஊடகவியலாளர் ஸ்னேகிஷ் அலிஸ் பில்லிப்(Snehish Alex Phillip) தனது ட்விட்டர் பக்கத்தில் பெங்களூரு ஏர்போர்டில் பறிமுதல் செய்யப்பட்ட 5kg போதைப்பொருள் குறித்து இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
Customs officials at the #Bengaluru airport seize 5 kg of ephedrine, concealed in wedding invitations that were to be shipped to Australia. Imagine how innovative and alert the officials have to be to counter this menace. pic.twitter.com/GqqWwNDqWR
— Snehesh Alex Philip (@sneheshphilip) February 23, 2020
மேலும், 2020 பிப்ரவரியில் Drugs Worth Over ₹ 5 Crore, Hidden In Wedding Cards, Seized At Bengaluru Airport எனும் தலைப்பில் NDTV வெளியிட்ட செய்தியில், " இந்த பார்சல் மதுரையை மையமாகக் கொண்ட ஏற்றுமதியாளர் பதிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர் " எனக் குறிப்பிட்டு உள்ளது.

Article Link
டைம்ஸ் ஆப் இந்தியா Bengaluru: Drugs worth Rs 5 crore stashed in 43 invitation cards for fake wedding எனும் தலைப்பில் வெளியிட்ட செய்தியில், பெங்களூரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குப் போதைப் பொருள் கடத்தப்பட்டபோது அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது என இந்த புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

Article Link
இதிலிருந்து குஜராத் மாநிலத்தில் திருமண பத்திரிகையில் வைத்து போதை பொருள் கடத்துவதாகப் பரவும் வீடியோ 2020 பிப்ரவரியில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கேம்பேகௌடா (Kempegowda) விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டபோது எடுத்தது எனத் தெரிய வருகிறது.
முடிவு :
நம் தேடலில், குஜராத்தில் திருமண அழைப்பிதழ்களில் வைத்து போதைப்பொருள் கடத்தும் பாஜகவினர் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ தவறானது. அந்த வீடியோ 2020ல் பெங்களூரில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு போதைப் பொருள் கடத்த முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ என அறிய முடிகிறது.
