
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
2022 அக்டோபர் 9ம் தேதி குஜராத் மாநிலம் மெக்ஸனா(Mehsana) மாவட்டத்தில் உள்ள மோதேரா(Modhera) எனும் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய பிரதமர் மோடி, நாட்டில் சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் கிராமம் என மோதேரா கிராமத்தை அறிவித்தார்.
இந்தியாவுலயே ஏன் இந்த உலகத்துலயே காலி நாற்காலிகளை வைச்சு தேர்தல் பரப்புரை செய்யற ஒரே கரகாட்ட கோஷ்டி நம்ம பாஜகதான்...
இது நடந்தது குஜராத் மாநிலத்துல... 😂😂😂#பாஜக_பரிதாபங்கள்... pic.twitter.com/HRrRpWzG3d
— MathiMaran (@MathiMa02738845) October 10, 2022
காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மோடி பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோவை பகிர்ந்து, மோடியின் கூட்டத்தில் மக்கள் கலந்துக்கொள்ளவில்லை எனவும், காலி இருக்கைகளை நோக்கி மோடி பேசியுள்ளார் எனவும் விமர்சித்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
வைரலான வீடியோ குறித்து இணையத்தில் தேடியபொழுது பாஜகவின் அதிகாரப்பூர்வ யூடுயூப் பக்கத்தில் 2022ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி இந்நிகழ்வின் முழு வீடியோ பதிவிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த வீடியோவின் 1.20வது நிமிடத்தில் ஆடிட்டோரியும் முழுக்க மக்கள் நிறைந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது. மேலும், 36வது நிமிடத்தில் அனைத்து இருக்கைகளிலும் மக்கள் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. 58நிமிட நீளம் உள்ள அந்த வீடியோவில் பல்வேறு இடங்களில் மக்கள் அரங்கம் முழுதும் நிறைந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது. எந்த இருக்கையும் காலியாக இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

இதிலிருந்து, காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளால் பரப்பப்படும் வீடியோ இந்நிகழ்வு முடிந்தப் பிறகு எடுக்கப்பட்டது என நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. மேலும், கூட்டம் முடிந்த பிறகு மக்கள் எழுந்து செல்லும் வீடியோவை தவறாகப் பரப்பியுள்ளனர் எனத் தெரியவருகிறது.
આ પ્રસંગે મુખ્યમંત્રી શ્રી @Bhupendrapbjp, પ્રદેશ અધ્યક્ષ શ્રી @CRPaatil, મંત્રીશ્રીઓ, પદાધિકારીશ્રીઓ, આગેવાનો સહિત મોટી સંખ્યામાં નાગરિકો ઉપસ્થિતિ રહ્યાં. (2/2)#SuryaGram_Modhera#BJP4Gujarat pic.twitter.com/roUomn8kfp
— BJP Gujarat (@BJP4Gujarat) October 9, 2022
Twitter link
முடிவு :
நம் தேடலில், குஜராத்தில் காலியான இருக்கைகளை நோக்கி பிரதமர் மோடி பேசியுள்ளார் என வைரலான வீடியோ தவறானது. அது நிகழ்வு முடிந்த பிறகு எடுக்கப்பட்ட வீடியோவை தவறாகப் பரப்பியுள்ளனர் என அறிய முடிகிறது.
