யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
குஜராத் அருகே கடலுக்கடியில் 70 அடி ஆழத்தில் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகை மாளிகை நாசா ஆராய்ச்சியால் உலகுக்கு காட்ட காட்சி.

Facebook link

Facebook link
விரிவான விளக்கம்
இந்து சமய புராணங்களில் கூறப்படும் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகை மாளிகை குஜராத் அருகே கடலுக்கடியில் 70 அடி ஆழத்தில் நாசாவால் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் வெளிவந்துள்ளதாக கடலுக்கு அடியில் எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்கள் அடங்கிய 2 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
[video width="426" height="272" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2021/12/262845430_1753725328146850_5115605993097942471_n.mp4"][/video]
உண்மை என்ன ?
குஜராத் கடல் பகுதியில் துவாரகை மாளிகையை நாசா கண்டுபிடித்ததாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கு முன்பாக 2019-ம் ஆண்டிலும் கூட கடலுக்கு அடியில் துவாரகா அரண்மனை என சில புகைப்படங்களின் தொகுப்பு வைரலாகியது. ஆனால், அவை இணையத்தில் கிடைக்கக்கூடிய இந்தியா, பிற நாட்டைச் சேர்ந்த மற்றும் அனிமேஷன் புகைப்படங்கள் என தெளிவுப்படுத்தி இருந்தோம்.
மேலும் படிக்க : கடலுக்கு அடியில் இருக்கும் துவாரகா பகுதியின் புகைப்படங்களா ?| உண்மை என்ன ?
அந்த புகைப்படங்களும், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள மியாமி பகுதியில் கடலுக்கு அடியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ” Neptune Memorial Reef ” என்ற அருங்காட்சியகத்தின் புகைப்படத்தையும் மீண்டும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

வீடியோவின் தொடக்கத்தில் காண்பிக்கப்பட்டுள்ள அரண்மனையின் புகைப்படம் அட்லாண்டீஸ் தொடர்பாக உருவாக்கப்பட்ட அனிமேஷன் புகைப்படம்.
மேலும் படிக்க : இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் இந்துக் கோவிலா ?
மேலும், இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்ட “ Taman Pura “ எனும் கோவில் பூங்கா தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் புகைப்படங்களையும் வீடியோவில் இணைத்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : இந்தோனேசியாவில் 7500 ஆண்டுகள் பழமையான சிவாலயமா ?
இதேபோல், வியட்நாம் நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த பழமையான சிவலிங்கத்தின் புகைப்படத்தையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்,
முடிவு :
நம் தேடலில், குஜராத் அருகே கடலுக்கடியில் 70 அடி ஆழத்தில் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகை மாளிகை நாசா ஆராய்ச்சியால் உலகுக்கு காட்டிய காட்சி என பரவும் வீடியோ தவறானது.
அமெரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் கடலுக்கடியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தின் புகைப்படங்கள், அனிமேஷன் மற்றும் அட்லாண்டிக் தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் அனிமேஷன் புகைப்படங்களின் தொகுப்பை வைத்து வீடியோவை உருவாக்கி இருக்கிறார்கள் எனத் தெளிவாகிறது.