YouTurn

குஜராத்தில் கொரோனா நோயாளிகள் தரையில் சிகிச்சை பெறுகிறார்களா ?

குஜராத்தில் கொரோனா நோயாளிகள் தரையில் சிகிச்சை பெறுகிறார்களா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

பரவிய செய்தி

குஜராத் மாடல். ராஜ்கோட், குஜராத்தில் கோரொனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை வசதிகள் இல்லாமல் தரையில் படுக்க வைத்து சிகிச்சை பெறுவதாக கீழ்காணும் 0.32 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு வருகிறது.



வீடியோவில், தொழிற்சாலை போன்ற பகுதியில் இடைவெளி விட்டு சிலர் தனித்தனியாக படுத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு குளுக்கோஸ் போன்றவை ஸ்ட்ரிப் மூலம் ஏற்றப்பட்டு இருக்கிறது. அங்கிருப்பவர்களுக்கு தேவையான மாத்திரை, மருந்துகள் இருப்பதையும் காண முடிந்தது. இவ்வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

வைரலாகும் வீடியோ தொடர்பாக கீ வார்த்தைகளை கொண்டு தேடுகையில், " வைரலாகும் வீடியோவில் இடம்பெற்ற பெண்ணின் புகைப்படத்துடன் ஏப்ரல் 3-ம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி கிடைத்தது.



செராமிக் தொழிற்சாலையின் தரையில் தொழிலாளர்கள் கையில் ஸ்ரிப்ஸ் உடன் படுத்து இருக்கும் வீடியோ வெளியாகியதால் செராமிக் நகரம் என அழைக்கப்படும் மோர்பி-ன்(குஜராத்) சுகாதார கட்டமைப்பு மீதான கேள்வி எழுந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை தரையில் படுக்க வைத்து சிகிச்சை பெறும் கேப்ஷன் டைல்ஸ் தொழிற்சாலையின் உரிமையாளர் அருண் படேல் கூறுகையில், " அவர்கள் யாரும் கொரோனா நோயாளிகள் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக 4 முதல் 5 தொழிலாளர்கள் காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதாக கூறியதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். மருத்துவமனையில் இடமில்லை என்றும், கொரோனா அச்சம் காரணமாக மருத்துவமனைக்கு வெளியே வைத்து சிகிச்சை அளிக்குமாறும் மருத்துவர்கள் அறிவுரை கூறினர். அவர்களுக்கு கொரோனா சோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது " என டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் விடிவி குஜராத்தி உள்ளிட்ட செய்திகளுக்கு தெரிவித்து இருக்கிறார்.



மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன. அதேநேரத்தில், காய்ச்சல், உடல்நிலை சரியில்லை என செல்லும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு இடவசதி இல்லை என்பதே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகவும் அமைகிறது.

முடிவு :

நம் தேடலில், குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை என பரப்பப்படும் வீடியோவில் இருப்பவர்கள் கொரோனா நோயாளிகள் இல்லை.

குஜராத் மோர்பி பகுதியில் தொழிற்சாலையின் தரையில் படுக்க வைத்து எந்த வசதியும் இல்லாமல் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோவே தவறாக பரப்பப்பட்டு வருகிறது.

எனினும், கொரோனா பரவல் மற்றும் மருத்துவமனையில் இடமில்லை என்பதால் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் டைல்ஸ் தொழிற்சாலையின் தரையில் படுக்க வைத்து சிகிச்சை பெற்றது நிகழ்ந்து இருக்கிறது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க