YouTurn

கார் பார்க்கிங்காக முஸ்லீம் ஒருவரை தாக்கியதாக வாட்ஸ் ஆஃப் வதந்தி !

கார் பார்க்கிங்காக முஸ்லீம் ஒருவரை தாக்கியதாக வாட்ஸ் ஆஃப் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

குஜராத்தில் முஸ்லீம் ஒருவரை கார் பார்க்கிங் மாற்றி செய்ததால் சாலையில் வைத்தே ஆர்எஸ்எஸ் , பிஜேபி ஆதரவாளர்கள் தாக்குவதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. ஆனால், உண்மையான செய்தி என்னவென்று அறியாமல் வீடியோவின் ஃபார்வர்டுகள் அதிகரித்து வருகிறது. காந்திநகரில் வசித்து வந்த ரதன் பார்வாத், ஹர்திக் பார்வாத்...

பரவிய செய்தி

குஜராத்தில் கார் இடம் மாற்றி பார்க்கிங் செய்ததால் ஒரு முஸ்லீம் சகோதரனை மோடியின் ஆர்எஸ்எஸ், பிஜேபி தீவிரவாதிகள் கொடுக்கும் பரிசு. இது தான் மோடியின் புதிய இந்தியா.

விரிவான விளக்கம்

குஜராத்தில் முஸ்லீம் ஒருவரை கார் பார்க்கிங் மாற்றி செய்ததால் சாலையில் வைத்தே ஆர்எஸ்எஸ் , பிஜேபி ஆதரவாளர்கள் தாக்குவதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது. ஆனால், உண்மையான செய்தி என்னவென்று அறியாமல் வீடியோவின் ஃபார்வர்டுகள் அதிகரித்து வருகிறது.

காந்திநகரில் வசித்து வந்த ரதன் பார்வாத்,  ஹர்திக் பார்வாத் ஆகியோர் திருமணம் செய்து கொண்டு அகமதாபாத்தில் உள்ள நாவா வடஜ் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், ஹர்திக் பார்வாத் புதிய கார் ஒன்றினை வாங்கித் தரும்படி தன் மனைவியுடன் கூறி நடந்த வாக்குவாதத்தில் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.



கணவன் தாக்கிய பிறகு அங்கிருந்து தன் பெற்றோர் வீட்டிற்கு ரதன் சென்றுள்ளார். ஹர்திக் பார்வாத் அங்கு சென்றும் மீண்டும் தன் மனைவியை தாக்கியதாக ரதன் பார்வாத் தந்தை ராம்பாய் பார்வாத் கூறியுள்ளார். கொடூரமாக தாக்கியதில் தன் பெண்ணுக்கு இடது கண் தெரியவில்லை என்றும், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளில் காவல்துறையிடம் புகார் தெரிவித்து இருந்தனர்.



2017 மார்ச் 19-ம் தேதி ரதன் பார்வாத்-ஐ அவரின் வீட்டில் வைத்தே கணவர் தாக்கிய போது அங்கிருந்த அப்பெண்ணின் உறவினர்கள் அவரை சாலையில் வைத்து தாக்கி உள்ளனர். மேலும், அவரின் காரையும் அந்த கும்பல் தாக்கி உள்ளனர்.

அந்த சம்பவத்தையே வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். 2017 ஆம் ஆண்டிலேயே சாலையில் தாக்கப்படும்  நபரின் வீடியோ வைரலாகி அதைப் பற்றி விசாரித்து 2017 ஏப்ரல் 5-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் வெளியாகி உள்ளது.

இரு வருடங்களுக்கு நடந்த சம்பவத்தை தவறான கதையுடன் இணைத்து வாட்ஸ் ஆஃப்-ல் பரப்பி வருகின்றனர். ஒரு செய்தியை பகிர்வதற்கு முன்பு உண்மையாக இருக்குமா ? என யோசித்து பகிரவும்.

சுருக்கமாக

2017-ல் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவரை அப்பெண்ணின் உறவினர்கள் சாலையின் நடுவே வைத்து தாக்கி சம்பவம் தற்போது தவறாக வாட்ஸ் ஆஃப்களில் பரவி வருகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.