YouTurn

கூடுவாஞ்சேரி மழை நீரில் முதலை எனப் பரவும் தவறான வீடியோ மற்றும் புகைப்படம் !

கூடுவாஞ்சேரி மழை நீரில் முதலை எனப் பரவும் தவறான வீடியோ மற்றும் புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கூடுவாஞ்சேரி மழை நீரில் முதலை !



Twitter link | Archive link  

விரிவான விளக்கம்

தமிழகத்தின் பெரும்பலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் குடியிருப்பு மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு அருகே கூடுவாஞ்சேரி பகுதியில் தேங்கிய மழை நீரில் முதலை ஒன்று மிதந்து சென்றதாக வீடியோ ஒன்றும், புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





Archive link 

உண்மை என்ன ? 

கூடுவாஞ்சேரி பகுதியில் மழை நீரில் முதலை மிதந்து செல்லும் வீடியோ தவறானது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கூறுகையில், " செங்கல்பட்டு மாவட்டம் வல்லாச்சேரி  கூட்ரோட்டில் முதலை வந்ததாக தவறான வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. அது முதலை அல்ல, மரக்கட்டை. ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீர் செல்லும் கால்வாயில் சுழற்சி காரணமாக மரக்கட்டை மிதப்பதை முதலை என வதந்தி பரப்பி இருக்கிறார்கள் " எனத் தெரிவித்து இருக்கிறார்.

இதேபோல், கூடுவாஞ்சேரி குடியிருப்பு பகுதியில் முதலை இருப்பதாக பரவும் புகைப்படம் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தது. சில மாதங்களுக்கு முன்பாகவே தாய்லாந்து வெள்ளத்தில் முதலை நீச்சல் அடிப்பதாக இதே புகைப்படம் இணையத்தில் இடம்பெற்றுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், கூடுவாஞ்சேரி குடியிருப்பு பகுதியில் முதலை வலம் வருவதாக பரவும் வீடியோ மற்றும் புகைப்படம் தவறானது. அது வதந்தி என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க