YouTurn

ஜி.யு.போப் புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவர் இருப்பதாகத் தவறான செய்தி வெளியிட்ட தினமலர்!

ஜி.யு.போப் புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவர் இருப்பதாகத் தவறான செய்தி வெளியிட்ட தினமலர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஜி யு போப் புத்தகத்தில் காவி உடை அணிந்த வள்ளுவர்.


X link

விரிவான விளக்கம்

உலகப் பொதுமறையாக கருதப்படும் திருக்குறளை ஜி.யு.போப் என்ற ஆங்கிலேயர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அப்புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பதாகத் தினமலர் நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. 



அந்த நியூஸ் கார்டில் உள்ள திருவள்ளுவர் நெற்றியில் திருநீறு பட்டையுடன் காவி உடை அணிந்துள்ளார்.

உண்மை என்ன?

தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டில் உள்ள படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். ’Kobo’ என்னும் இணையதளத்தில் இதே படம் பதிவிடப்பட்டுள்ளது. 



மேற்கொண்டு தேடியதில், இதே படம் ‘Himalayan academy’ என்ற தளத்திலும்  இருப்பதைக் காண முடிந்தது. ஆனால், அப்படத்தில் ஜி.யு.போப்பின் பெயர் இடம் பெறவில்லை. அதில்சத்குரு சிவாய சுப்ரமுனியசுவாமி’ என்கிற பெயர்தான் இடம் பெற்றுள்ளது.



இப்புத்தகத்தின் PDF வடிவத்தையும் பதிவிறக்கம் செய்து பார்த்ததில், இது ஜி.யு.போப் எழுதவில்லை என்பதை உறுதி செய்ய முடிந்தது. அதுமட்டுமின்றி அப்புத்தகத்தின் ‘Resources’ பகுதியில் தான் ஜி.யு.போப்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

சத்குரு சிவாய சுப்ரமுனியசுவாமி திருக்குறளை மொழிபெயர்த்த புத்தகத்தின் அட்டைப்படத்தில் தான் திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்று வரையப்பட்டுள்ளது. அதில் உள்ள பெயரை ஜி.யு.போப் என எடிட் செய்துள்ளனர். அப்படி போலியாக எடிட் செய்யப்பட்ட படத்தைத்தான் தினமலர் வெளியிட்டுள்ளது.  

மேலும் படிக்க: “வரலாற்று பிழை” எனக் கட்டுரை வெளியிட்ட துக்ளக்| அரசியலுக்குள் சிக்கும் வள்ளுவர்!

திருவள்ளுவருக்கு மத மற்றும் ஜாதி அடையாளம் கொடுக்க முயல்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் இப்படியான பொய் செய்திகளும் கருத்துக்களும் வந்த போது அவை பற்றி யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க: திருக்குறள் அடிப்படை கிறிஸ்தவமே என வெளியான புத்தகம் | திருவள்ளுவருக்கு மத சாயமா?

முடிவு: 

ஜி.யு.போப் திருக்குறளை மொழிபெயர்த்த புத்தகத்தில் திருவள்ளுவர் காவி நிற உடையில் இருப்பதாகத் தினமலர் வெளியிட்ட செய்தி தவறானது. அப்புத்தகம் சத்குரு சிவாய சுப்ரமுனியசுவாமி என்பவரால் வெளியிடப்பட்டது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க