YouTurn

மணமகளின் தோழிக்கு தாலிக் கட்டிய மணமகன் என வைரலாகும் சீரியல் வீடியோ !

மணமகளின் தோழிக்கு தாலிக் கட்டிய மணமகன் என வைரலாகும் சீரியல் வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

புதுப்பேட்டை பட பாணியில் திருமணத்தில் Twist.. Girl Bestie மீது பாய்ந்து தாலி கட்டிய மாப்பிள்ளை.

விரிவான விளக்கம்

மணமேடையில் மணப்பெண்ணிற்கு தாலிக் கட்டும் நேரத்தில் பின்னால் இருந்த மணப்பெண் தோழிக்கு மணமகன் தாலி கட்டியதாக 15 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



இது எங்கு நிகழ்ந்தது எனத் தெரியாமல் புதுப்பேட்டை பட பாணியில் நடைபெற்ற திருமணம் என வீடியோவின் சிறு காட்சி மட்டும் சுற்றி வருகிறது.

உண்மை என்ன ? 

வைரலாகும் வீடியோ உண்மையில் திருமணத்தில் நிகழ்ந்த சம்பவம் அல்ல, அது தொலைக்காட்சி சீரியலுக்காக நடைபெற்ற ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட காட்சியே.



தெலுங்கில் ஜீ தொலைக்காட்சியில் " muthyamantha muddu " எனும் பெயரில் ஒளிபரப்பு செய்யப்படும் நாடகத்திற்காக நடைபெற்ற ஷூட்டிங் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்து வெளியிட்டு உள்ளனர். அந்த காட்சி அடங்கிய வீடியோ இன்னும் தொடரில் வெளியாகவில்லை.



அந்த ஷூட்டிங் போது முதலில் மணமகனாக நடிக்கும் நடிகர் பின்னால் இருக்கும் பெண்ணிற்கு பதிலாக மாமியாருக்கு தாலி கட்ட சென்றதால் அங்குள்ளவர்கள் சிரித்துள்ளனர், பின்னர் மீண்டும் எடுக்கப்பட்ட காட்சி என இரு வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முடிவு :

நம் தேடலில், புதுப்பேட்டை பட பாணியில் திருமணத்தில் மணப்பெண்ணிற்கு பதிலாக மணப்பெண்ணின் தோழிக்கு மணமகன் தாலிக் கட்டியதாக பரவும் வீடியோ தெலுங்கு சீரியலுக்காக நடைபெற்ற ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட காட்சி என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க