YouTurn

அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்பட உள்ளதா ?|அமைச்சர் பதில்.

அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்பட உள்ளதா ?|அமைச்சர் பதில்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளதாக செய்தி நிறுவனங்கள் போன்ற நியூஸ் கார்டுகள் மற்றும் பிரேக்கிங் வீடியோக்கள் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வேகமாக பரவி வருகிறது. EPS 24*7 சென்ற முகநூல் பக்கத்தில், தமிழக...

பரவிய செய்தி

இந்தியாவில் முதன்முறையாக காலை உணவுத் திட்டம். தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு இனி " காலை உணவு திட்டம் " செயல்படுத்தப்படும் - முதல்வர் எடப்பாடி. மாணவர்கள் மகிழ்ச்சி.



Facebook link | archived link 

விரிவான விளக்கம்

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளதாக செய்தி நிறுவனங்கள் போன்ற நியூஸ் கார்டுகள் மற்றும் பிரேக்கிங் வீடியோக்கள் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வேகமாக பரவி வருகிறது.

EPS 24*7 சென்ற முகநூல் பக்கத்தில், தமிழக முதல்வர் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார் என வெளியான வீடியோ பதிவு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்கள் மற்றும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று, கமெண்ட்களில் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.



இந்த வீடியோ பதிவை முகநூலில் பரப்பியது, முதல்வர் பழனிச்சாமியின் ஆதரவு முகநூல் பக்கம், ஓபிஸ் & இபிஎஸ் ஆர்மி, அதிமுக உள்ளிட்ட முகநூல் பக்கங்களே. ஆனால்,  " காலை உணவு திட்டம் " குறித்து பரவும் தகவல்கள் வதந்திகள் என தமிழக கல்வி அமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.



Youtube link | archived link 

இன்று(ஜனவரி12) கோபிசெட்டிபாளையம் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " அரசு பள்ளியில் காலை உணவு வழங்கப்படும் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் செய்தி வதந்தியே தவிர வேறொன்றுமில்லை. அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக முதல்வருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பரவும் செய்திகளை பார்க்க முடிந்தது. இது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது " எனக் கூறியுள்ளார்.



Twitter link | archived link 

ஒரு வருடத்திற்கு முன்பாக சென்னை மாநகராட்சி பள்ளியில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விரிவுபடுத்த தமிழக அரசு பரிசீலித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியதை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.



இதேபோல், ஜனவரி 10-ம் தேதி வெளியான செய்தியில், " நாகை மாவட்டத்தில் உள்ள கீச்சாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக காலை உணவை சாப்பிடாமல் வருவதை அறிந்து நன்கொடையாளர்களின் உதவியோடு காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளனர் " என வெளியாகி இருக்கிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…