யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நாகாலாந்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரின் நியமனத்திற்கு தமிழ்நாடு பாஜக தரப்பிலும், ஆதரவாளர்களும் வரவேற்பு அளித்தனர். எனினும், காங்கிரஸ் உள்ளிட்டவர்கள் அவரின் நியமனத்தை சந்தேகித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ள ஆர்.என்.ரவியை போலீஸ் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றுவதாக 1.15 நிமிட வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடுகையில், " 2021 ஆகஸ்ட் 28-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியை வலுக்கட்டாயமாக போலீஸ் கைது செய்வதாக " இதே வீடியோ கோப்ரா போஸ்ட், ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது நண்பர் சமீபத்தில் டெல்லியில் தற்கொலை செய்து கொண்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்கூர் லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஆகஸ்ட் 27-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
Archive link
அவரின் கைது நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட வீடியோவே இது. இந்த வீடியோவை உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தன் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவியை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து செல்வதாக பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோவில் இருப்பவர் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்கூர் என அறிய முடிகிறது.

भूतपूर्व पुलिस के विरुद्ध भाजपा सरकार की पुलिस का अभूतपूर्व कार्य!
भाजपाई राजनीति लोगों के बीच दरार पैदा करके ही जिंदा है. अब भाजपा सरकार के दबाव के कारण पुलिस ही पुलिस के ख़िलाफ़ काम करने पर मजबूर है. एक सेनानिवृत आईपीएस के साथ ऐसा व्यवहार अक्षम्य है. #नहीं_चाहिए_भाजपा pic.twitter.com/o7OG4XRAMy
— Akhilesh Yadav (@yadavakhilesh) August 27, 2021