YouTurn

கூகுள் நிறுவன ஊழியர் இறந்தால் அளிக்கப்படும் உதவிகள் பற்றி தெரியுமா ?

கூகுள் நிறுவன ஊழியர் இறந்தால் அளிக்கப்படும் உதவிகள் பற்றி தெரியுமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

2012-ம் ஆண்டு பிரபல “ FORBES “ பத்திரிகையில் கூகுள் ஊழியர்கள் பற்றி வெளியான செய்தி ஆதாரத்தை வைத்தே இத்தகவல் பரவத் துவங்கியது. அதில், கூகுள் நிறுவனத்தின் முதன்மை மக்கள் அலுவலர் அளித்த பேட்டியை “ Hers’s what happens to google employee when they die “ என்ற தலைப்பில் வெளியாகியது. கூகுள் நிறுவனத்தில்...

பரவிய செய்தி

கூகுள் நிறுவனம் தன்னிடம் வேலை பார்க்கும் பணியாளர்கள் இறந்து விட்டால் அவர்களின் வருமானத்தில் 50 % அதாவது பாதி தொகையை இறந்தவர்களின் மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஒவ்வொரு மாதமும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வழங்கும். அதுமட்டுமின்றி இறந்தவரின் குழந்தைக்கு 19 வயது வரை மாதம் 1000 டாலர்கள் வழங்கும்.

விரிவான விளக்கம்

2012-ம் ஆண்டு பிரபல “ FORBES “ பத்திரிகையில் கூகுள் ஊழியர்கள் பற்றி வெளியான செய்தி ஆதாரத்தை வைத்தே இத்தகவல் பரவத் துவங்கியது. அதில், கூகுள் நிறுவனத்தின் முதன்மை மக்கள் அலுவலர் அளித்த பேட்டியை “ Hers’s what happens to google employee when they die “ என்ற தலைப்பில் வெளியாகியது.

கூகுள் நிறுவனத்தில் 14 வருடங்கள் பணியைக் மேற்கொண்டு வரும் அமெரிக்க கூகுள் பணியாளர்கள் இறந்து விட்டால் அவர்களின் மனைவி அல்லது துணையாக வாழ்ந்தவருக்கு இறந்தவரின் ஊதியத்தில் 50 % காசோலை மூலம் வழங்கப்படும். நிறுவனத்தின் இவ்வுதவி இறப்பில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு வருடமும் தடைப்படாமல் வழங்கப்படும்.



மேலும், இதில் இறந்தவரின் குடும்பத்திற்கு பணி வழங்குவது போன்ற அறிவிப்புகள் இல்லை. எனினும், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் 34 ஆயிரம் அமெரிக்க ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்ட்டது. 2012 கணக்கின்படி கூகுள் நிறுவன அமெரிக்க ஊழியர்கள் எண்ணிக்கை 34 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

2011 ஆம் ஆண்டில் இதற்கான பணிகள் முறையாக செயல்படுத்தப்பட்டது. எனினும், சில நன்மைகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

இறந்தவருக்கு குழந்தைகள் இருந்தால் மனைவிக்கு அளிக்கப்படும் பங்கில் மாற்றம் இல்லாமல் உடனடியாக அக்குழந்தைக்கு மாதம் 1000 டாலர்கள் வழங்கப்படும். குழந்தை 19 வயதை அடையும் வரை அல்லது முழுநேர மாணவராக 23 வயது வரை இருந்தாலும் உதவித்தொகை வழங்கப்படும்.



முடிவு :

1. கூகுள் நிறுவனம் தன் ஊழியர் இறந்தால் அவரின் ஊதியத்தில் 50 சதவீதத்தை 10 ஆண்டுகளுக்கு அளிக்கும் என்பது உண்மை.
2. குழந்தைகளுக்கு 19 வயது வரை மாதம் 1000 டாலர் உதவித்தொகை அளிக்கும் என்பதும் உண்மை.
3. பணி நியமனம் ஏதுமில்லை. என்றாலும், இந்த உதவிகள் அமெரிக்க கூகுள் ஊழியர்களுக்கு என்பதை குறிப்பிட வேண்டும்.
4. ஊழியர் 14 வருடம் தொடர்ந்து அந்நிறுவனத்தில் பணியாற்றிருக்க வேண்டும் என்ற சில நிபந்தனைகள் இருப்பதையும் அறிய வேண்டும்.

இதன் அடிப்படையில் கூகுள் நிறுவன ஊழியர்கள் பற்றி வரும் செய்திகளில் உண்மைகளும் சொல்லப்படாத தகவல்களும் இருப்பதை அறியலாம்.

சுருக்கமாக

கூகுள் நிறுவனத்தின் ஊழியர் இறந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு அளிக்கப்படும் உதவிகள் பற்றி பரவும் செய்திகள் உண்மையாக இருந்தாலும் அதில் சில நிபந்தனைகள் உள்ளன என்பதையும் அறிய வேண்டும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.