YouTurn

கோமதி மீதான குற்றச்சாட்டு பொய் என ஆய்வில் வெளியாகியதா ?

கோமதி மீதான குற்றச்சாட்டு பொய் என ஆய்வில் வெளியாகியதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து மீது ஊக்கமருந்து சர்ச்சை எழுந்தது. ஏற்கனவே கோமதி தடகள போட்டியில் பயன்படுத்திய ஷூ ஒரு விவாத பொருளாக மாறியது. ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியதால் கோமதி மாரிமுத்து மீது இடைக்கால தடை...

பரவிய செய்தி

" கோமதி " ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பொய் என ஆய்வு தகவல்களில் தெரிய வந்துள்ளது.

விரிவான விளக்கம்

தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து மீது ஊக்கமருந்து சர்ச்சை எழுந்தது. ஏற்கனவே கோமதி தடகள போட்டியில் பயன்படுத்திய ஷூ ஒரு விவாத பொருளாக மாறியது. ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியதால் கோமதி மாரிமுத்து மீது இடைக்கால தடை விதிக்கப்பட்டது.



ஊக்கமருந்து தொடர்பாக பெடரேஷன் கோப்பை மற்றும் ஆசிய தடகளப் போட்டி ஆகிய இரு சோதனைகளிலும் கோமதி தோல்வி அடைந்து இருந்தார். எனினும், இவை ” ஏ ” மாதிரி பிரிவு சோதனை என்றே கூறப்பட்டன. அடுத்ததாக, ” பி ” பிரிவு சோதனையிலும் கோமதி தோல்வி அடைந்தால் 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என செய்திகளில் வெளியாகியது.

இந்நிலையில், கோமதி மாரிமுத்து மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டில் உண்மை இல்லை. ஆய்வு தகவலில் குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டு உள்ளதாக முகநூலில் பரவி வருகிறது.

ஆனால், கோமதியின் ஊக்க மருந்து சோதனை குறித்த முடிவுகள் வெளியாகியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. கோமதி குறித்த செய்திகள் மே மாதம் வரை மட்டுமே வெளியாகி உள்ளது. தற்பொழுது கோமதியின் ஊக்கமருந்து சோதனை குறித்த செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.



மகாராஷ்டிரா மாநிலத்தில் சீனியர் தடகள போட்டிகள் நடக்க உள்ளது. அதில் கலந்து கொள்பவர்களுக்கு தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு எஜென்ஜி ஆனது ஊக்கமருந்து சோதனை மேற்கொள்ளும் என அத்லடிக் பெடரேஷன் ஆஃப் இந்தியாவின் (ஏஎஃப்ஐ) தலைவர் சுமரிவாலா தெரிவித்து உள்ளதாக ஜூன் 23-ம் தேதி பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தியில் வெளியாகி உள்ளது. அதில், கோமதி மீதான ஊக்கமருந்து விவகாரம் இடம்பெற்று இருந்தது.



ஜூன் 19-ம் தேதி திருச்சியில் செய்தியாளர்களுக்கு கோமதி மாரிமுத்து அளித்த பேட்டியில், " நான் ஊக்க மருந்தினை எடுக்கவில்லை என்பது 100 சதவீதம் உண்மை. இதற்காக வழக்கு தொடர்ந்து உள்ளேன். ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்பதை நிரூபிப்பேன் " என தெரிவித்து இருந்தார்.

முடிவு :

கோமதி மீதான ஊக்கமருந்து சோதனை முடிவுகள் வெளியாகி அவரின் மீதான குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டதாக பரவும் செய்திக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. சோதனை முடிவுகள் வெளியாகவில்லை என்பதே உண்மையான தகவல். முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…