YouTurn

முதல்வர் பழனிச்சாமி தன் மகளுக்கு தங்கத்தில் தையல் மெஷின் அளித்ததாக வதந்தி !

முதல்வர் பழனிச்சாமி தன் மகளுக்கு தங்கத்தில் தையல் மெஷின் அளித்ததாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்கும் திட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் இருந்து முதல்வர் குறித்த செய்திகள் ஏதாவது ஒன்று சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டே வருகிறது. மேலும் படிக்க : முதல்வர்...

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லை தன் மகளுக்காக வெளிநாட்டில் தங்கத்தில் தையல் மிஷின் வாங்கிய எடப்பாடி. கடைக்கோடி தமிழன் கண்ணில் படும் வரை ஷேர் பண்ணு.

விரிவான விளக்கம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்கும் திட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் இருந்து முதல்வர் குறித்த செய்திகள் ஏதாவது ஒன்று சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டே வருகிறது.

மேலும் படிக்க : முதல்வர் பழனிச்சாமியின் வெளிநாட்டு பயணம் – அரசுக்கா ? அரசியலுக்கா ?

இந்நிலையில், முதல்வர் பழனிச்சாமி தன் மகளுக்கு தங்கத்தில் தையல் மெஷின் வாங்கி கொடுக்கவே வெளிநாட்டிற்கு சென்றாக முகநூல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்க நிறத்தில் இருக்கும் தையல் மெஷினின் புகைப்படம் பரவி வருகிறது.





முதல்வர் தன் மகளுக்கு தங்கத்தில் தையல் மெஷின் வாங்கியதாக கூறும் பதிவுகளில் பலரும் கேளிக்கையாக சிரித்து உள்ளனர். எனினும், சிலர் உண்மை என நினைத்து பகிர்ந்து உள்ளார்கள், சில அரசியல் கட்சி சார்ந்தவர்களும் பகிர்வதை காண முடிந்தது.



ஆனால், தங்கத்தில் தையல் மெஷின் என பரவும் புகைப்படத்தில் இருப்பது அழகுக்காக பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான கடிகாரமே. giftonline என்ற தளத்தில் " Miniature clock " பிரிவில் மேற்கண்ட படத்தின் உண்மையான புகைப்படத்தை காண முடிந்தது. இதேபோன்று பல பொருட்களில் கடிகாரங்கள் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



" Elite Sewing Machine Miniature Clock " எனக் கூறப்படும் இக்கடிகாரத்தின் விலை 125 டாலர்கள் என விற்பனை தளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இப்படி விற்பனை செய்யப்படும் கடிகாரப் பொருளின் படத்தை வைத்து தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…