YouTurn

Gobackmodi ட்விட்டர் ட்ரெண்டிங் பாகிஸ்தானியர்கள் வேலையா ?| தரவுகள் உண்மையா ?

Gobackmodi ட்விட்டர் ட்ரெண்டிங் பாகிஸ்தானியர்கள் வேலையா ?| தரவுகள் உண்மையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் #Gobackmodi ஹாஷ்டாக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. அக்டோபர் 11-ம் தேதி சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு சீனா தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரின் சந்திப்பும்...

பரவிய செய்தி

Gobackmodi ட்ரெண்டிங்கில் 58% ட்விட்கள் பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்துள்ளன, இந்தியாவில் இருந்து 22 சதவீதமும் , சென்னையில் இருந்து வெறும் 4 சதவீதம் மட்டுமே வந்துள்ளன.

விரிவான விளக்கம்

இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் #Gobackmodi ஹாஷ்டாக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. அக்டோபர் 11-ம் தேதி சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு சீனா தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரின் சந்திப்பும் நிகழ்ந்தது.

வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்திற்கு சீன நாட்டின் தலைவர் வருகை தருவதற்கு தமிழகத்தின் சமூக ஊடகங்களில் #TNwelcomesXiJinping என்ற ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்தனர். அதே நேரத்தில் , இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக #Gobackmodi ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டு ட்விட்டரில் முதலிடம் பிடித்தது. இம்முறை சீன மொழியில் Gobackmodi என்ற ஹாஷ்டாக்கையும் இணைத்து ட்ரெண்ட் செய்தனர். இது ஆளும் தரப்பினரின் ஆதரவாளர்களுக்கு கோபத்தை தூண்டி இருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக #Gobackmodi ஹாஷ்டாக் செய்தது பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத குழுக்கள் என்ற செய்தி வெளியாகத் துவங்கி இருக்கிறது . குறிப்பாக, பாகிஸ்தான் நாட்டில் இருந்தே போலியான ட்விட்டர் கணக்குகள் மூலம் #Gobackmodi ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக மீம் பதிவுகள் பதிவிடப்படுகிறது .



Twitter archived link  

இந்தியா நியூஸ் சேனலின் நெறியாளர்  Shehzad Jai Hind என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் " #Gobackmodi ஹாஷ்டாக் பின்னால் இருக்கும் உண்மை . 58% ட்வீட்கள் பாகிஸ்தான் நாட்டில் இருந்தும் , 4 சதவீதம் சென்னையில் இருந்தும் , 2 சதவீதம் தமிழும் , 23 சதவீதம் உருது மொழியிலும் வெளியாகி இருக்கிறது . இதை டைம்ஸ்நவ் வெளிக்கொண்டு வந்ததாக குறிப்பிட்டு மீம்ஸ் ஒன்றையும் பதிவிட்டு இருந்தார். 



News archived link 

இதேபோன்று, தினத்தந்தி செய்தி இணையதளத்தில் வெளியான செய்தியிலும் " பாகிஸ்தானில் இருந்து  58 சதவீத டுவிட்டுகள் போடப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து குறைவான டுவிட்டுகளே, 2 சதவீதம் மட்டுமே தமிழ் டுவிட்டுகள், 23 சதவீத உருது டுவிட்டுகள் வெளியாகி உள்ளதாகவும் , உளவுத்துறை விசாரணை நடந்தி வருவதாகவும் கூறி இருக்கின்றனர்.

பழைய தரவுகள் : 

#Gobackmodi ஹாஷ்டாக் பின்னால் பாகிஸ்தான் இருக்கிறதா என்ற தலைப்பிற்கு பிறகு செல்லலாம். முதலில், 58% ட்வீட்கள் பாகிஸ்தான் நாட்டில் இருந்தே வந்துள்ளது என கூறும் ட்விட்டர் தரவுகள் குறித்து பார்ப்போம்.



இதேபோன்று, மார்ச் 2019-ம் தேதி பிரதமர் மோடிக்கு எதிராக #Gobackmodi ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அப்பொழுதும், இதற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பாக விரிவான செய்தியை நாம் வெளியிட்டு இருந்தோம்.



ட்விட்டரில் #Gobackmodi ஹாஷ்டாக் எந்த நாட்டில் , எந்த மொழியில் ட்ரெண்ட் செய்யப்பட்டது என அளிக்கப்பட்டு இருக்கும் தரவுகள் மார்ச் மாதம் #Gobackmodi ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்யப்பட்ட பொழுது அளிக்கப்பட்ட தரவுகளே என்பதை இரண்டையும் ஒற்றுமைப்படுத்தி பார்க்கும் பொழுது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் படிக்க : #GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா ?



அப்பொழுது #Gobackmodi ஹாஷ்டாக் ட்ரெண்ட்க்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இதே தகவல்களுடன் வெளியான செய்தித்தாள் பக்கத்தை ரங்கராஜ் பாண்டே அவர்களும் பகிர்ந்து இருந்தார். ஒரே தரவுகளை வைத்தே பாகிஸ்தான் காரணம் எனக் கூறி வருகின்றனர்.

உளவுத்துறை விசாரணை : 

டைம்ஸ் நவ் செய்தியில் , #Gobackmodi ஹாஷ்டாக் ட்ரெண்ட் பின்னால் தமிழக எதிர் கட்சிகள் இருப்பதாக உளவுத்துறை சந்தேகமடைந்ததாகவும், ஆனால் விசாரணையை தீவிரப்படுத்தியதில் இதற்கு பின்னால் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தனர். அதில், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் #Gobackmodi ஹாஷ்டாக்கை பயன்படுத்தி வெளியிட்ட ட்வீட்கள் இருந்தன.



Twitter archived link 



Twitter archived link 
தமிழக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #Gobackmodi ஹாஷ்டாக் ட்ரெண்டிங் செய்யப்பட்டு முதலிடத்தில் இருந்துள்ளது. இங்கு பதிவிடும் ட்வீட்களே ட்ரெண்டிங்கில் இருக்கும். அது , கட்சி ஐ.டி பிரிவுகளோ , நிறுவனங்களோ அல்லது தனி நபரோ யாராகவும் பதிவிட்டு இருக்கலாம்.



பாகிஸ்தானியர்கள் , காஷ்மீர் பிரச்சனைக்கு ஆதரவு அளிப்பவர்கள் #Gobackmodi ஹாஷ்டாக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து இருப்பது உண்மையே. ஆனால், பாகிஸ்தான் நாட்டில் ட்விட்டர் ட்ரெண்டிங் ஆகும் அளவிற்கு பதிவாகவில்லை என்பதை trends24 தளத்தில் பார்க்கும் பொழுது தெரிந்து கொள்ள முடிகிறது .



பயங்கரவாத குழுக்கள் உடன் பாகிஸ்தான் இளைஞர்கள் இணைந்து #Gobackmodi ஹாஷ்டாக்கை ட்ரெண்ட் செய்கிறார்களா என்பதை இந்திய உளவுத்துறையே ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். 

முடிவு : 

நம்முடைய ஆய்வில் , #Gobackmodi ஹாஷ்டாக்கில் 58 சதவீதம் பாகிஸ்தான் நாட்டில் இருந்து வருவதாக கூறுவது உள்ளிட்ட தரவுகள் கடந்த மார்ச் மாதத்திலேயே பகிர்ந்து உள்ளனர். அதனை அப்பொழுதே தவறான தகவல் என நாம் செய்தி வெளியிட்டு இருக்கிறோம்.

சமீப காலமாக #Gobackmodi ஹாஷ்டாக் ட்விட்டர் ட்ரெண்ட் அரசின் பார்வையை அதிகம் ஈர்த்துள்ளது. இதனாலே, #Gobackmodi ஹாஷ்டாக் குறித்த விசாரணை வரை சென்று இருக்கிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.