YouTurn

#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா ?

#GoBackModi ட்ரெண்ட் ஆக பாகிஸ்தான் காரணமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகைக்கு எதிராக ட்வீட்டரில் #GoBackModi என பதிவிட்டு எதிர்ப்பு தெரிவிப்பது தமிழகத்தில் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ட்வீட்டர் ட்ரெண்டில் நம்பர் ஒன் ஆக #GoBackModi இடம் பிடிக்கும். ஆனால், #GoBackModi தமிழ்நாட்டில் இருந்து ட்ரெண்ட் செய்யப்படவில்லை...

பரவிய செய்தி

பிரதமர் மோடி தமிழ்நாடு வரும் போது எல்லாம் ட்ரென்டிங்கில் இருந்த #GoBackModi பாகிஸ்தானியர்கள் மூலமே அதிகம் ட்வீட் செய்யப்படுகிறது.

விரிவான விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகைக்கு எதிராக  ட்வீட்டரில் #GoBackModi என பதிவிட்டு எதிர்ப்பு தெரிவிப்பது தமிழகத்தில் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ட்வீட்டர் ட்ரெண்டில் நம்பர் ஒன் ஆக #GoBackModi  இடம் பிடிக்கும்.

ஆனால்,  #GoBackModi  தமிழ்நாட்டில் இருந்து ட்ரெண்ட் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் நாட்டில் இருந்தே ட்ரெண்ட் செய்யப்படுகிறது என்ற செய்தி ஃபேஸ்புக், வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமீபத்தில் பகிரப்படுகிறது. பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கூட இதே செய்தியை பதிவிட்டு உள்ளார்.



அதில், #GoBackModi பாகிஸ்தானில் இருந்து 58%, இந்தியாவில் இருந்து 22% , UK-வில் இருந்து 6% , சென்னையில் இருந்து வெறும் 4% மட்டுமே ட்வீட் செய்யப்பட்டுள்ளதாக பரவி வருகிறது.



ஆனால், #GoBackModi ட்ரெண்ட்-க்கு எதிராக கூறும் இந்த புள்ளி விவரம் முற்றிலும் தவறானது. இந்தியாவில் இருந்து அதிகம் செய்யப்பட்ட ட்வீட்களே " India Trends " என ட்வீட்டரில் காண்பிக்கும். பாகிஸ்தான் நாட்டில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட விசயமே ட்ரெண்ட்ங்கில் காண்பிக்கும்.அதனால் " India Trends "-இல் முதலிடம் பெரும் ட்ரெண்ட்ஸ்-க்கும் பாகிஸ்தான் நாட்டில் போடும் ட்வீட்டுக்கும் சம்பந்தமில்லை.

trends24 இணையத்தளத்திலும் twitter-இலும்  இன்று காலை ( 6 march2019 ) எடுக்கப்பட்ட தரவுகளை வைத்து பார்க்கலாம்.



உதாரணமாக, இன்று தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackSadistkModi என  ட்வீட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு இன்றைய ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் நாட்டின் ட்வீட்டர் ட்ரெண்டிங்கில் பார்க்கையில் ட்ரெண்டிங் பட்டியலில் மோடி பற்றிய ஒரு வார்த்தைக் கூட இடம் பெறவில்லை.





#GoBacksadistModi இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் பார்க்கையில் அதிகம் தமிழில் செய்த ட்வீட்களே இருக்கிறது.



இதைத் தவிர, #GoBacksadistModi  உலக அளவில் ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. இதற்கு பாகிஸ்தான் நாட்டில் இருந்தும் கூட பதிவு செய்து இருக்கலாம் அல்லவா என்ற சிலர் கமெண்ட்டில் பதிவு விடுவார்கள்.

அவர்களுக்கு, உலக அளவில் #GoBacksadistModi  ட்ரென்ட் ஆகிய இருந்தாலும் பாகிஸ்தான் நாட்டின் ட்வீட்டர் ட்ரெண்டிங் பட்டியலில் அது இடம் பெறவில்லை என்பதை தெளிவாக பார்க்கவும்.

ஆக, #GoBacksadistModi , #GoBackModi  போன்ற ஹஷ்டாக்கள் பாகிஸ்தானில் இருந்து ட்ரெண்ட் செய்யப்படுகிறது எனக் கூறும் தகவல்கள் வதந்தியே என நிரூபிக்கப்படுகிறது. இதற்கு இன்றைய ட்வீட்டர் ட்ரெண்ட் ஆதாரமாகவே உள்ளது.

" மேலும், #GoBackModi-க்கு எதிராக #TnWelcomeModi ஹஸ்டாக் ட்ரெண்ட் செய்ய முயற்சித்த போது அது மகாராஷ்டிராவில் இருந்து பதிவிடப்பட்டன என்ற உண்மை பொது வெளியில் தெரிய வந்தது. இது தொடர்பாக செய்திகளிலும் கூட வெளியாகி உள்ளன" .

முக்கியமாக, பிரதமர் மோடிக்கு எதிராக ட்வீட்டர் ட்ரெண்ட் செய்வதால் தமிழ்நாட்டு மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் ரகசிய தொடர்பு இருப்பது போன்றும், இங்குள்ளவர்களுக்கு ஆன்டி இந்தியன் பட்டங்களும் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் படிக்க : Is Pakistan responsible for #GOBackModi trend?

சுருக்கமாக

இந்தியாவில் ட்ரென்ட் செய்யப்பட்ட விஷயங்கள் மட்டுமே இந்தியா ட்ரென்ட்ஸ் என ட்வீட்டரில் வரும். பாகிஸ்தானியர்கள் ட்வீட் செய்து #GoBackModi ட்ரென்ட் செய்யப்பட்டது என்பது முற்றிலும் தவறான தகவல்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.