யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கோவிட் -19 தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஏப்ரல் 14-ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்டது. எனினும், அத்தியாவசிய தேவைக்காக மக்கள் வெளியே வருவதை தவிர்க்க முடியாத சூழலும் இங்குள்ளது. இருப்பினும், தேவையின்றி வெளியே வரும் மக்களை காவல்துறையினர்...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
கோவிட் -19 தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஏப்ரல் 14-ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்டது. எனினும், அத்தியாவசிய தேவைக்காக மக்கள் வெளியே வருவதை தவிர்க்க முடியாத சூழலும் இங்குள்ளது.
இருப்பினும், தேவையின்றி வெளியே வரும் மக்களை காவல்துறையினர் பிடிக்கும் சம்பவங்களும் ஏராளமாய் நடைபெறுகிறது. அப்படி தேவையின்றி வெளியே வரும் மக்களை காவல்துறையினர் பிடித்து வெளியிடும் வீடியோக்களில் வித்தியாசமாக முறைகளை கையாள்வதை பார்க்க முடிகிறது. அப்படியொரு சம்பவம் கோவாவில் நிகழ்ந்து உள்ளதாக கீழ்காணும் வீடியோ சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
17 வினாடிகளே ஓடக்கூடிய வீடியோவில், பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களின் முன் பேய் போல் வெள்ளை நிற துணியை போர்த்திக் கொண்டு ஒருவர் குதிப்பதும், அதைக் கண்டு வாகனத்தில் வந்தவர்கள் அரண்டு ஓடுவதும் பதிவாகி இருக்கிறது.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், மார்ச் 29-ம் தேதி இந்திய டுடே உடைய ட்விட்டர் பக்கத்தில் " கோவாவில் மக்கள் வீட்டிற்குள் இருக்க ஒருவர் மேற்கொண்ட புதுவிதமான செயல் " என வைரலாகும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
Twitter link | archived link
ஆனால், பத்திரிகையாளர் சுபீர் கோஷ் என்பவர் இந்தியா டுடே வெளியிட்ட வீடியோவை பகிர்ந்து தவறான வீடியோ என்றும், உண்மையான வீடியோ இதுவே என 2019-ம் ஆண்டு வெளியான வீடியோ பதிவுவையும் பகிர்ந்து உள்ளார்.

Twitter link | archived link
2019-ம் ஆண்டு மே 13-ம் தேதி "Apa Kapluk" என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோ எங்கு எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது குறித்து தேடிய பொழுது, 2019 மே 11-ம் தேதி sutan sik contributed எனும் யூடியூப் சேனலில் அந்த வீடியோவின் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

Take a look at this man's innovative way to make people stay indoors in #Goa. #usergeneratedcontent #stayhomestaysafe #coronavirus pic.twitter.com/YsPZ3bOLkT
— India Today (@IndiaToday) March 29, 2020
Twitter link | archived link
ஆனால், பத்திரிகையாளர் சுபீர் கோஷ் என்பவர் இந்தியா டுடே வெளியிட்ட வீடியோவை பகிர்ந்து தவறான வீடியோ என்றும், உண்மையான வீடியோ இதுவே என 2019-ம் ஆண்டு வெளியான வீடியோ பதிவுவையும் பகிர்ந்து உள்ளார்.

Twitter link | archived link
2019-ம் ஆண்டு மே 13-ம் தேதி "Apa Kapluk" என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோ எங்கு எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது குறித்து தேடிய பொழுது, 2019 மே 11-ம் தேதி sutan sik contributed எனும் யூடியூப் சேனலில் அந்த வீடியோவின் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

யூடியூப் சேனலில் வெளியான வீடியோ ப்ராங் வீடியோ என்பதை தெளிவாய் குறிப்பிட்டு உள்ளார். அதேபோல், அந்த வீடியோவிற்கு அளிக்கப்பட்ட கமெண்ட்களில் இருந்து மேற்காணும் வீடியோ இந்தோனேசியாவில் வைரல் ஆகி உள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

தவறான வீடியோவை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு இந்தியா டுடே ட்விட்டர் பக்கத்தில், இந்த வீடியோ 2019-ல் இந்தோனேசியாவின் ஜகர்தலாவில் எடுக்கப்பட்ட ப்ராங் வீடியோ எனக் குறிப்பிட்டு உள்ளார்கள்.
கொரோனா வைரஸ் முக்கிய செய்தியாக உருவெடுத்த பிறகு வைரஸ் சார்ந்த தவறான தகவல்களே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளன. 2019-ல் இந்தோனேசியாவில் வைரலான ப்ராங் வீடியோவை கோவாவில் மக்கள் வெளியே வருவதை தடுக்க போலீசார் மேற்கொண்ட முயற்சி என தவறாக பரவி வருகிறது.