யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
கிளென் மேக்ஸ்வெல், வினி ராமனை நமது ஹிந்து சனாதன தர்மத்தின்படி திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அப்போது அவர் ஒரு ரகசியமான காரியம் செய்தார். தனது திருமணத்தின்போது அவர் தான் கிரிக்கெட் விளையாடும் பேட்டையும் கொண்டு வந்திருந்தார். அங்கிருந்த அனைவருக்கும் அது ஏன் என்று புரியவில்லை.
ஆனால் க்ளென் மேக்ஸ்வெல்லின் திட்டமே வேறு... அவர் தனது திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர்களிடம் தனது பேட்டைக் கொடுத்து அதற்கெனத் தனியாக "சத்ரு சம்ஹார" யாகம் வளர்த்து, வேத மந்திரங்களைக் கூறி, சக்தியேற்றித் தரும்படி கேட்டுக் கொண்டார்.

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்
இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நவம்பர் 06 வரை இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகள் மட்டும் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன.
இந்நிலையில், கடந்த நவம்பர் 07 அன்று ஆப்கானிஸ்தானிற்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், ஆஸ்திரேலிய வீரரான கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 201 ரன்களை குவித்ததன் மூலம், மூன்றாவது அணியாக ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர்கள் இல்லாமலே இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கிளென் மேக்ஸ்வெல் பெற்றுள்ளார்.
இதற்கிடையில் "கிளென் மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமனின் திருமணத்தின் போது, மேக்ஸ்வெல் தனது கிரிக்கெட் மட்டையையும் கொண்டு வந்திருந்தார். தனது திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர்களிடம் தனது பேட்டைக் கொடுத்து அதற்கெனத் தனியாக "சத்ரு சம்ஹார யாகம்" வளர்த்து, வேத மந்திரங்களைக் கூறி, சக்தியேற்றித் தரும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் சனாதன ஹிந்து மதக் காப்பாளர்கள் என்பதால் மேக்ஸ்வெல்லுக்கு இரண்டு நிபந்தனைகள் வைத்தனர்" என்று கூறி மேக்ஸ்வெல் திருமணத்தின் போது கிரிக்கெட் பேட் உடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
மேற்காணும் பதிவை வெளியிட்டவரின் பக்கமும் ஃபார்வர்டு செய்த பதிவில் இடம்பெற்றுள்ளது. இளங்கோவன் முத்தையா என்பவரது முகநூல் பக்கத்தில் இப்பதிவு முதன் முதலில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
Facebook link | Archive link

அப்பதிவின் கமெண்டில், அவர் அளித்து இருந்த பதில் மூலம் நையாண்டியாகத்தான் இப்பதிவை பதிவிட்டு இருக்கிறார் என்பதை அறிய முடிந்தது.
கடந்த 2022 மார்ச் 31 அன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமனின் திருமணம் குறித்து நியூஸ் 18 செய்தி வெளியிட்டிருந்தது. அதில் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. அதில் மேக்ஸ்வெல்லின் கால்களுக்கு அருகில் கிரிக்கெட் பேட் எதுவும் இல்லை.

மேலும் பரவி வரும் தகவல்களை உண்மை என்று நம்பி சிலர் தங்களது சமூக ஊடக பக்கங்களில் தவறாகப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இவை நையாண்டிக்காக மட்டுமே பகிரப்பட்ட ஒரு பதிவாகும்.

மேலும் படிக்க: குஜராத் அரசு மருத்துவமனை என சிங்கப்பூர் ஓட்டலின் படத்துடன் வைரலாகும் நையாண்டிப் பதிவு !
மேலும் படிக்க: சீன ஆய்வகத்தில் இருந்து தப்பிய வயாகரா செலுத்தப்பட்ட கொசுக்கள்.. தவறாக வைரலான நையாண்டி செய்தி !
முடிவு:
நம் தேடலில், மேக்ஸ்வெல்லின் இரட்டை சதத்திற்கு காரணம் சத்ரு சம்ஹார யாகமே என்று கூறி பரவி வரும் ஒரு புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதையும், இது முழுக்க முழுக்க நையாண்டிக்காக மட்டுமே பகிரப்பட்ட ஒரு பதிவு என்பதையும் அறிய முடிகிறது.

🤡🤡🤡🤡😂😂😂😂😂😂 pic.twitter.com/5Mepdz6op3
— James Stanly (@JamesStanly) November 8, 2023