YouTurn

மாணவிகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியைகளை மட்டுமே நியமிக்க நடவடிக்கையா ?| அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு !

மாணவிகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியைகளை மட்டுமே நியமிக்க நடவடிக்கையா ?| அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க  ஆசிரியைகளை மட்டுமே நியமனம் செய்ய நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களால் ஏற்படும் பாலியல் தொல்லை சம்பவங்கள் தற்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, அதுதொடர்பான என்ன நடவடிக்கையை அரசு எடுக்கும் என்ற கவனம் பெற்று இருக்கிறது.

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தந்திடிவி செய்திக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க  ஆசிரியைகளை மட்டுமே நியமனம் செய்ய நடவடிக்கை எனக் கூறியதாக செய்தி வெளியாகியது. இந்த செய்திக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?



நேற்று(ஜூன்7-ம் தேதி) " கேள்விக்கென்ன பதில் " நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் அளித்த முழு பேட்டியில், " மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளை மட்டுமே நியமனம் செய்ய நடவடிக்கை " என கூறிய பகுதி இடம்பெறவில்லை.



பேட்டியின் முழு வீடியோ வெளியாவதற்கு முன்பாக வெளியான இவ்வீடியோவில், தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு நடைபெறும் பாலியல் தொல்லைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, " நிர்வாகரீதியாக பெண் ஆசிரியர் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைப்பது குறித்தும், நடவடிக்கை குறித்தும் " தெரிவித்து இருக்கிறார்.

பின்னர், பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் செயலாளர் சபீதா பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் குறித்த சம்பவங்கள் எழுந்த போது பெண்கள் பள்ளியில் பெருமளவு ஆசிரியைகளை நியமிக்க நடவடிக்கை எடுப்போம் என ஆணை வெளியிட்டார். அதை உறுதிப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளீர்கள் என நெறியாளர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், " கண்டிப்பாக, இந்த கருத்தை நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். நம்முடைய முதன்மை செயலாளர் மற்றும் கமிஷன் அளவில் பேசலாம். அதுகூட நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது " எனக் கூறி இருப்பார்.

மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியைகளை மட்டுமே நியமிக்க நடவடிக்கை என்பது அன்பில் மகேஷ் அவர்களின் முதன்மை கருத்து அல்ல. முன்பு இருந்த ஆணை குறித்து எழுப்பிய கேள்விக்கு, அது குறித்து ஆலோசிக்கலாம் எனப் பதில் அளித்து இருக்கிறார்.



Archive link  

தந்திடிவி செய்தி சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் உடன் வைரலாக, " பெண்கள் பள்ளியில் ஆசிரியைகளை மட்டுமே நியமிக்கும் முடிவை எடுக்கவில்லை. பரிந்துரைகள் வந்திருப்பதால் ஆலோசனை மட்டுமே செய்து வருகிறோம் " என அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்து இருக்கிறார்.

முடிவு :

நம் தேடலில், மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியைகளை மட்டுமே நியமனம் செய்ய நடவடிக்கை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக பரவும் தகவல் தவறானது. அதுதொடர்பான பரிந்துரைகள் வந்திருப்பதால் ஆலோசனை மட்டுமே செய்து வருகிறோம் என அன்பில் மகேஷ் விளக்கம் அளித்து இருப்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க