YouTurn

போனில் குழந்தை கேட்ட பரிசை நேரில் வந்து கொடுத்த அரபு போலீஸ்| எப்போது நடந்தது ?

போனில் குழந்தை கேட்ட பரிசை நேரில் வந்து கொடுத்த அரபு போலீஸ்| எப்போது நடந்தது ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

செல்போனில் காவல்துறையிடம் பரிசு கேட்ட குழந்தைக்கு அரபு நாட்டு போலீஸ் நேரில் பரிசு வழங்கிய கதை ஒன்று தமிழ் முகநூல் குழுக்களில் கடந்த இரு நாட்களாக வைரலாகி வருவதை பார்க்க நேர்ந்தது. அது உண்மையா எனத் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தது. போலீஸ் வழங்கிய பரிசு பொருளுடன் இருக்கும் குழந்தையின் புகைப்படத்தை...

பரவிய செய்தி

" இதுதான் அரபுநாட்டு போலீஸ். துபாய் சார்ஜா நகரில் ஆறு வயது சிறுமி வீட்டில் இருக்கும் மொபைலை எடுத்து விளையாட்டுத்தனமாக 3 பட்டனை அழுத்தி போன் செய்வதுபோல் காதில் வைத்துள்ளார். ஆனால் குழந்தை சுமையா அழுத்திய நம்பர் துபாய் போலீஸ் கண்ட்ரோலுக்கு சென்றுவிட அவர்கள் போனை அட்டெண்ட் செய்து யார் என்று கேட்டால் ஒரு குழந்தையின் குரல். உடனே நிலைமையை புரிந்து அன்போடு உனது பெயர் என்ன என்று கேட்டதும் சுமையா என்று சொல்ல, உனக்கு என்ன வேண்டும் என்றதும் எனக்கு இப்பவே கிப்ட் வேண்டும் என சொல்லி இருக்கிறாள் சுமையா. அவர்கள் சிரித்துக் கொண்டே போனை கட் செய்து அந்த மொபைல் நம்பர் உள்ள வீட்டை கண்டுபிடித்து அன்பளிப்புகளுடன் சென்றுள்ளனர். வீட்டுக்கு போலீஸ் வந்ததும் சுமையாவின் பெற்றோர் குழப்பமான மனதோடு போலீசை பார்க்க அவர்கள் பயப்பட வேண்டாம் நாங்கள் சுமையாவை பார்க்க வந்துள்ளோம் என்று கூறி கை நிறைய அன்பளிப்புகளை அள்ளிக் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள் "



Facebook link | archive link

விரிவான விளக்கம்

செல்போனில் காவல்துறையிடம் பரிசு கேட்ட குழந்தைக்கு அரபு நாட்டு போலீஸ் நேரில் பரிசு வழங்கிய கதை ஒன்று தமிழ் முகநூல் குழுக்களில் கடந்த இரு நாட்களாக வைரலாகி வருவதை பார்க்க நேர்ந்தது. அது உண்மையா எனத் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தது.



போலீஸ் வழங்கிய பரிசு பொருளுடன் இருக்கும் குழந்தையின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், Gulfnews இணையதளத்தில் 2018 ஜூன் 16-ம் தேதி " Girl gets Eid gift wish by calling police hotline " என்கிற தலைப்பில் குழந்தையின் புகைப்படத்துடன் வெளியான செய்தி கிடைத்தது.



சுமையா அஹ்மத் அல் நக்பி எனும் சிறுமி அரபு எமிரேட்ஸின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோர் ஃபக்கான் பகுதியின் போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டு ஏதியா பரிசு (ஈகைத் திருநாள்) கேட்டுள்ளார். அக்குழந்தையின் ஆசை நிறைவேறும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர் காவல்துறையில் இருந்து சுமையாவின் வீட்டிற்கு சர்பிரைஸ் ஆக சென்று பரிசு வழங்கி உள்ளனர்.

இது குறித்து கோர் ஃபக்கான் காவல் நிலைய இயக்குனர் லெப்டினன்ட் கேனல் வலீத் காமிஸ் அல் யமஹி " மகிழ்ச்சியை பரப்ப " விருப்புவதாக தெரிவித்து இருந்தார். குழந்தைக்கு பரிசு வழங்கிய புகைப்படம் ஷார்ஜா போலீசின் ட்விட்டர் பக்கத்தில் 2018 ஜூன் 15-ம் தேதி வெளியாகி இருக்கிறது.



Twitter link | archive link

2018 ஜூன் 15-ம் தேதி ஷார்ஜா போலீசின் ட்விட்டர் பக்கத்தில், பரிசு பெற்ற குழந்தை தன் ஆசை நிறைவேறியது குறித்து பேசிய வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.



Twitter link | archive link

2018-ல் ஈகைத் திருநாள் பரிசு கேட்ட சுமையா குழந்தையின் ஆசையை அரபு நாட்டின் கோர் ஃபக்கான் போலீஸ் நிறைவேற்றி உள்ளார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க