YouTurn

இந்திய விவசாயிகளுக்காக ஜெர்மனியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியா ?

இந்திய விவசாயிகளுக்காக ஜெர்மனியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

டில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியில் நடந்த டிராக்டர் பேரணி.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் மாதக்கணக்கில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனி நாட்டில் டிராக்டர் பேரணி நடைபெற்றதாக எம்.டி. ஜுவரியா கயல் என்பவரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட 18 நொடிகள் கொண்ட வீடியோ 17 ஆயிரத்திற்கும் மேல் ஷேர் ஆகி வைரலாகி வருகிறது.



உண்மை என்ன ?

ஜெர்மனியில் நடைபெற்ற டிராக்டர் பேரணி குறித்து தேடுகையில், Ruptly செய்தி சேனலில் 2021 பிப்ரவரி 5-ம் தேதி ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி தொடர்பான காட்சிகள் அடங்கிய 3 நிமிட வீடியோ வெளியாகி இருக்கிறது.



சமீபத்தில் ஜெர்மனியின் தலைநகரில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியது உண்மைதான். ஆனால் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. அந்த நாட்டில் கொண்டு வரப்பட்ட புதிய வேளாண் கொள்கைக்கு(பூச்சிகள் பாதுகாப்பு தொடர்பாக) எதிராகவே.



பிப்ரவரி 10-ம் தேதி thelocal.de எனும் செய்தியில், " பூச்சிக்கொல்லிகளின் பயன்படுபாட்டை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் " பூச்சிகள் பாதுகாப்பு " சட்ட வரைவிற்கு எதிராக நூற்றுக்கணக்கான விவசாயிகள் பெர்லினுக்குள் டிராக்டர்களை ஓடிச் சென்றதாக " வெளியாகி இருக்கிறது.



மேலும் படிக்க : இது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா ?

இதற்கு முன்பாகவும், ஜெர்மனியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் பழைய புகைப்படங்களை இந்தியாவில் நிகழ்ந்தாகவும், இந்தியாவிற்கு ஆதரவாக நிகழ்ந்ததாகவும் தவறாக பரப்பி இருந்தனர். அதுகுறித்து படிக்கவும்.

முடிவு : 

நம் தேடலில், டெல்லியில் போராடும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஜெர்மனியில் டிராக்டர் பேரணி நடைபெற்றதாக வைரல் செய்யப்படும் வீடியோ தவறானது. ஜெர்மனியில் கொண்டு வந்த வேளாண் தொடர்பான கொள்கைக்கு எதிராக பெர்லினில் நடைபெற்ற டிராக்டர் பேரணி என அறிய முடிந்தது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க