யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திய பிறகு எடுக்கப்பட்ட வீடியோவை வங்கதேசத்தில் இந்து மதக் குழந்தையின் நிலை எனத் தவறாகப் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
நன்றாக பாருங்க பங்களாதேஷில் நம்ம இந்து குழந்தை எப்படி இருக்கு பாருங்க, அந்த குழந்தையின் நிலையை பாருங்கள், அந்த குழந்தையின் அரணை கொடியை எப்படி புடுங்குறான் பாருங்கள், ஹிந்துவே தூங்காதே .
விரிவான விளக்கம்
வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் சிவில் சர்வீஸ் வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையுடன் மாணவர்களின் போராட்டம் தொடங்கியது. இப்போராட்டம் ஒரு கட்டத்தில் அரசை எதிர்த்து மிகப்பெரிய இயக்கமாக உருவெடுத்தது. இச்சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர்.
நன்றாக பாருங்க பங்களாதேஷில் நம்ம இந்து குழந்தை எப்படி இருக்கு பாருங்க, அந்த குழந்தையின் நிலையை பாருங்கள், அந்த குழந்தையின் அரணை கொடியை எப்படி புடுங்குறான் பாருங்கள், ஹிந்துவே தூங்காதே . pic.twitter.com/XEv6qsY5tS
— CVS (@velan2007) August 8, 2024
இந்நிலையில் வங்க தேசத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்றின் அரணை கொடி முஸ்லிமால் அறுக்கப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பாஜக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.
நன்றாக பாருங்க பங்களாதேஷில் நம்ம இந்து குழந்தை எப்படி இருக்கு பாருங்க, அந்த குழந்தையின் நிலையை பாருங்கள், அந்த குழந்தையின் அரணை கொடியை எப்படி புடுங்குறான் பாருங்கள், ஹிந்துவே தூங்காதே . pic.twitter.com/RkQf7B3AAi
— Raju RKT (@RajuBJP10) August 7, 2024
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோவில் ‘Aljazeera’ ஊடகத்தின் லோகோ இருப்பதைக் காணமுடிகிறது. மேலும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், இதே வீடியோ ‘CBS News’ என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த ஜூலை 20ஆம் தேதி பதிவிட்டிருப்பதைக் காணமுடிந்தது.
அதில், காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்திய பிறகு எடுக்கப்பட்ட வீடியோ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கொண்டு தேடியதில், இதே வீடியோ ‘Aljazeera Mubasher’ என்ற யூடியூப் பக்கத்திலும் ஜூலை 14ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துத் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம் மீது, இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவே அச்செய்தியிலும் கூறப்பட்டுள்ளது.
இவற்றில் இருந்து காசாவில் நடந்த சம்பவத்தை வங்கதேசம் என்றும், வீடியோவில் உள்ள குழந்தை இந்து என்றும் தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறியமுடிகிறது.
வங்கதேசத்துடன் தொடர்புப்படுத்திப் பல தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. அது குறித்த உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இந்து மதத்தைச் சேர்ந்த வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டுக்கு தீ வைப்பு எனப் பரவும் தவறான செய்தி!
மேலும் படிக்க: வங்கதேசத்தில் இந்து கடைகள் சூறையாடப்படுவதாகப் பரவும் பொய்!
முடிவு:
வங்கதேசத்தில் இந்து மதக் குழந்தையின் நிலை எனப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது காசா மீது இஸ்ரேல் குண்டு வீசிய பிறகு எடுக்கப்பட்ட வீடியோ.