யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
காயத்திரி ரகுராம் உற்சாக பானமருந்தி தன்னிலை மறந்து பரவசநிலையில் இருந்த ஆதாரம்
Twitter link | Archive link

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
தமிழ்நாடு பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்படுவதாக 2022 நவம்பர் மாதம் அக்கட்சி தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதையடுத்து, அண்ணாமலை தலைமையில் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி பாஜகவில் விலகுவதாக 2023 ஜனவரி 3ம் தேதி காயத்ரி ரகுராம் அறிவித்தார்.
இதையடுத்து, காயத்ரி ரகுராம் மது போதையில் தன்னிலை மறந்து காவலர்களுடன் தகராறு செய்ததற்கான ஆதாரம் எனக் கூறி 2.30 நிமிடம் கொண்ட வீடியோ ஒன்றை பாஜகவினரே சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ?
காயத்ரி ரகுராம் என பரப்பப்படும் வீடியோ குறித்து தேடுகையில், ஜனவரி 5ம் தேதி பாலிமர் செய்தியில் மது போதையில் வாகனம் ஒட்டி வந்த பெண் ஃபைன் கட்ட முடியாது என போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதாக இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.
இச்சம்பவம் குறித்து மேற்கொண்டு தேடுகையில், " சென்னை சைதாப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் பெண்ணை போக்குவரத்து காவலர்கள் விசாரித்த போது அளவுக்கு அதிகமாக குடித்து இருந்தது தெரிய வந்தது. இதற்காக அபராதம் விதித்த போது, நானே ஓசியில் தான் குடிக்கச் சென்றேன். அபராதம் கட்ட என்னிடம் பணம் இல்லை எனக் கூறி போக்குவரத்து காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

அந்த பெண் போக்குவரத்து காவலர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்த பெண் வேளச்சேரியைச் சேர்ந்த மீனா " என தினத்தந்தி உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

2018 நவம்பர் மாதம் சென்னை அடையாறு அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நடிகை காயத்ரி ரகுராம் மது போதையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஒட்டியதால் அபராதம் விதிக்கப்பட்டது. " அப்போது காவலர்களின் விசாரணையின் போது நடிகை காயத்ரி ரகுராம் ஒத்துழைப்பு கொடுத்ததாக " சோதனையின் போது அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் தெரிவித்து இருப்பதாக விகடன் கட்டுரையில் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : கட்சியில் இருந்து நீக்கம்: அண்ணாமலையை பற்றி காயத்ரி ரகுராம் கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !
மேலும் படிக்க : பொய் செய்தி பரப்புபவர் கைது எனப் பதிவிட்ட காயத்ரி ரகுராம்.. அவர் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு !
முடிவு :
நம் தேடலில், நடிகை காயத்ரி ரகுராம் மது போதையில் காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக பாஜகவினரால் பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோவில் இருப்பது காயத்ரி ரகுராம் இல்லை என அறிய முடிகிறது.

காயத்திரி ரகுராம் உற்சாக பானமருந்தி தன்னிலை மறந்து பரவசநிலையில் இருந்த ஆதாரம் pic.twitter.com/f7GMWffS9c
— தேசியம் பேசும் தமிழன் (@bharanipaints) January 6, 2023