யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார் - காயத்ரி ரகுராம் !

விரிவான விளக்கம்
தமிழக பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தன்னை முதுகில் குத்திவிட்டார் எனக் கூறியதாக யூடியூப் சேனல் வெளியிட்ட கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் ஆபாசமாக பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?
சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் நிர்வாகிகள் வகிந்து வந்த பதவிகளை மாற்றி புதிய பொறுப்புகளை வகிக்கும் நிர்வாகிகளின் பெயர்களை வெளியிட்டு இருந்தார். அதில், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு இருந்தார்.
காயத்ரி ரகுராம் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து காயத்ரி ரகுராம் கூறியது போல் சங்கமம் எனும் யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்ற கார்டே தற்போது சமூக வலைதளங்களில் ஆபாசமாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த யூடியூப் சேனலில் தமிழக அரசியல் குறித்த வீடியோக்கள் தரக்குறைவான தலைப்புகளால் வெளியிடப்பட்டு வருவதையும் பார்க்க முடிந்தது.
Twitter link | Archive link
இப்படி பரப்பப்படும் வீடியோ கார்டு போலியானது மற்றும் போலியான செய்தி என காயத்ரி ரகுராம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், தமிழக பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் அண்ணாமலை பற்றி கூறியதாக வெளியான வதந்தி செய்தி ஒன்று ஆபாசமாக பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

Fake Meme and fake news. pic.twitter.com/rFybJu04uQ
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) May 20, 2022