YouTurn

கங்கை கரையில் ஒதுங்கிய உடல்களை உண்ணும் நாய்கள்.. வைரலாகும் பழைய புகைப்படங்கள் !

கங்கை கரையில் ஒதுங்கிய உடல்களை உண்ணும் நாய்கள்.. வைரலாகும் பழைய புகைப்படங்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மாட்டிறைச்சிக்கு மனிதனை கொன்ற நாட்டில் மனிதனை நாய்கள் உண்ணும் அவலம் !



Archive link 



Archive link 

விரிவான விளக்கம்

" மாட்டிறைச்சிக்கு மனிதனை கொன்ற நாட்டில் மனிதனை நாய்கள் உண்ணும் அவலம் "  எனும் நிலைத்தகவல் உடன் ஆற்றின் கரையில் இருக்கும் இறந்தவர்களின் உடலை நாய்கள் கடிக்கும் இரு புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.



உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் புகைப்படங்களில், ஆற்றின் படித்துறையில் காணப்படும் உடலை நாய் கடிக்கும்படி இருக்கும் படத்தில் "alamy " எனும் புகைப்படம் விற்பனைத் தளத்தின் பெயர் இடம்பெற்று இருக்கிறது. அதை வைத்து தேடுகையில், alamy தளத்தில் வைரல் செய்யப்படும் புகைப்படம் இடம்பெற்றதை கண்டறிய முடிந்தது.



ஆனால், அந்த புகைப்படம் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் 2008ம் ஆண்டு எடுத்ததாக புகைப்படத்தின் விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆற்றின் கரையில் காணப்படும் உடலை நாய் கடிக்கும் மற்றொரு புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், புகைப்பட விற்பனை தளமான Gettyimages இணையதளத்தில் " An unidentified dead body in Varanasi " எனும் தலைப்பில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இது 2012-ல் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.



பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் பாயும் கங்கை நதியில் இறந்தவர்களின் உடல்கள் மிதந்து வந்த சம்பவம் தொடங்கி உத்தரப் பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரை மணலில் இறந்தவர்களின் உடல்களை புதைத்து செல்லும் நிலை குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.



ஆற்றில் மிதந்து வரும் மற்றும் ஆற்றின் மணலில் புதைத்து விட்டு சென்ற உடல்களை நாய்கள் கடித்து இழுத்து செல்லும் சம்பவங்கள் தொடர்பாக செய்திகள், வீடியோக்கள் வைரலாகி இருக்கின்றன. ஆனால், சமீபத்திய சம்பவங்களுடன் தொடர்புப்படுத்தி பழைய புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

முடிவு :

நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தில் இறந்த உடல்களை நாய்கள் உண்பதாக வைரலாகும் இவ்விரு புகைப்படங்களும் 8 மற்றும் 13 ஆண்டுகளுக்கு முன்பாக வாரணாசி பகுதியில் எடுக்கப்பட்டவை என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க